Some Populer Post

Month: November 2026

World

அமெரிக்க Nvidia நிர்வாக இயக்குநர் சீனப் பெண் உளவாளியுடன் இரகசிய உறவு?

அமெரிக்க Chipதயாரிப்பு நிறுவனமான Nvidia நிர்வாக இயக்குநர் Jensen Huang(63) சீன பெண் தொழிலதிபர் Alice Huangகுடன் ரகசிய தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. Alice Huang சீன உளவு அமைப்பிற்காகச் செயல்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சந்தேகித்ததாக The Newyork Times செய்தி வெளியிட்டிருந்தது. அதன்பிறகு, இந்த விவகாரம் பூதாகரமானது. அமெரிக்கக் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மீறி சீனாவுக்கு அதிநவீன ஏஐ சிப்களைப் பெற உதவியதாக குற்றம்சாட்டப்படும் சிங்கப்பூரின் ‘MegaSpeed’ தரவு மைய நிறுவனத்துடன் Alice […]

Sri Lanka

இரு நாட்களில் 14 சம்பவங்களில் 16 பேர் பலியானதாக தரவு!  

கடந்த இரண்டு நாள்களுக்குள் இலங்கையில் பதிவான பாரிய விபத்துகள் மற்றும் அனர்த்தங்களால், ஒரு கோடீஸ்வர வர்த்தகர் மற்றும் விசேட வைத்தியர் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கொம்பனித்தெரு, மின்னேரியா, வறக்காபொலை, தெனியாய, ஹொரண, பெரியநீலாவணை, குடாஓயா, தும்மலசூரிய, மதவாச்சி, சூரியவெவ, தம்புள்ளை மற்றும் தங்காலை உள்ளிட்ட பல்வேறு பொலிஸ் பிரிவுகளில் இந்த அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. கொம்பனித்தெருவிலுள்ள பிரபல சொகுசு ஹோட்டலொன்றின் 26ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து கோடீஸ்வர […]

Sri Lanka

மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: இருவரை தேடும் பொலிஸார்!

பத்தேகம, வவுலகல பகுதியில் நபர் ஒருவர் மற்றும் இரு பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற இந்த முக்கொலைச் சம்பவத்தில், காரில் வந்த இருவர், முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த ஆண் ஒருவரையும் இரு பெண்களையும் நோக்கி டி-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தக் குற்றம் தொடர்பில் பத்தேகம காவல்துறையினரும் எல்பிட்டிய பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவும் விசாரணைகளை […]

Sri Lanka

தேரர்களின் சத்தியாக்கிரகத்தில் கைதானவர் ஹெரோயின் பயன்படுத்தியமை உறுதி

அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரரருடன் இருந்தபோது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்தியிருந்தமை அவருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தஹம் பிரசாத் என்ற பலதுர ரங்கிரியலாகே பிரசாத் சுசந்த ஜயசிரி எனப்படும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார். அண்மையில் அநுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு அருகிலுள்ள பொலிஸாருக்கும், தேரர்களுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றமான சம்பவம் தொடர்பாக இருவர் கைது […]

Sri Lanka

சாதனை படைத்தது வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி

தேசிய பாடசாலைகளுக்கிடையிலான 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான சிறந்த உற்பத்தித்திறன் நிகழ்ச்சித்திட்டத்திற்கான விருது வழங்கும் விழா, அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இவ்விழாவில், வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி தேசிய அளவில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கல்லூரிக்குச் பெருமை சேர்த்த இந்த விருதினை, கல்லூரியின் அதிபர் திருமதி நவரத்தினம் சத்தியபாமா வெகுவிமரிசையாகப் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், வெற்றியீட்டிய அதிபருடன் கல்லூரியின் ஆசிரியர்களான எஸ். விநோதன், திருமதி இந்துமதி ரவிச்சந்திரன் […]

Sri Lanka

சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கஸ்ஸப தேரருக்கு நோட்டீஸ்

அனுராதபுரம் ரூவன்வெலி சாயவுக்கு முன்பாகச் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குமார்களுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் சியபத் பசிந்து விக்ரமரத்ன இன்று (09) உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரை குறித்த இடத்திலிருந்து வெளியேறுமாறு கடந்த 7ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவை ரத்து செய்யுமாறு பலாங்கொடை கஸ்ஸப தேரர் சார்பில் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Sri Lanka

மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (8) நாட்டின் பல பகுதிகளில் மதுபான விற்பனை நிலையங்களை  மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, வடக்கு மாகாணம் மற்றும் நுவரெலியா மாவட்டம், மற்றும் பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை, ரிதீமாலியத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைத் தவிர, ஏனைய அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் நாளை மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடும் அல்லது அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறும் […]

Sri Lanka

நேருக்கு நேர் மோதிய பேருந்து – வான்

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்கபொல, மாஹேன பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மூவரே உயிரிழந்துள்ள நிலையில், மேலும் நால்வர் படுகாயமடைந்து வரக்காப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த வான் ஒன்று, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில், கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி எதிர்த்திசையில் பயணித்த […]

Sri Lanka

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

வரும் திங்கட்கிழமை (9) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  மாகாண ஆளுநர்கள் அறிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இந்த விசேட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், எதிர்வரும் சனிக்கிழமை (14) கல்வி செயற்பாடுகள்  முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 9ஆம் திகதி வழமைபோல் இயங்கும் எனவும் ஆளுநர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக, மத்திய, ஊவா, […]

Tami Global News @2026. All Rights Reserved.