Some Populer Post

  • Home  
  • கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவாக்கல்
- Sri Lanka

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவாக்கல்

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஆதரவாளர்கள் துப்பரவு செய்யும் பணியை வியாழக்கிழமை (12) கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் துசாங்கள் உட்பட மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். எதிர்வரும் 27 ம் திகதி மாவீரர் நினைவேந்தல் இடம்பெற உள்ள நிலையில் மாவீர்களின் குடும்பத்தினர் துயிலும் இல்லங்களுக்கு சென்று நினைவேந்தலில் ஈடுபட்டுள்ள நிலையில் அந்த துயிலும் […]

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஆதரவாளர்கள் துப்பரவு செய்யும் பணியை வியாழக்கிழமை (12) கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் துசாங்கள் உட்பட மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.

எதிர்வரும் 27 ம் திகதி மாவீரர் நினைவேந்தல் இடம்பெற உள்ள நிலையில் மாவீர்களின் குடும்பத்தினர் துயிலும் இல்லங்களுக்கு சென்று நினைவேந்தலில் ஈடுபட்டுள்ள நிலையில் அந்த துயிலும் இல்லங்கள் துப்புரவு செய்து அலங்கரிக்கும் ஏற்பாடுகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கமைய நவம்பர் மாதம் மாவீரர் மாதமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி அறிவித்து நவம்பர் முதலாம் திகதி மட்டக்களப்பு தரவை, மாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்யும் பணி ஆரம்பித்து மாவீரர் நினைவு தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செய்தி ஆரம்பித்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து மட்டக்களப்பிலுள்ள மாவடி முன்மாரி, வாகரை கண்டலடி, மாவீரர் துயிலும் இல்லங்களையும் துப்பரவு செய்யும் பணியை முன்னெடுத்து வருவதுடன் அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலும் இல்லத்தை துப்பரவு செய்யும் பணியை நேற்று ஆரம்பித்து வைத்தனர்.

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் துஷாங்கன் தலைமையில் மாவீரர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து இந்து மாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு பணியை முன்னெடுத்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.