Some Populer Post

Month: November 2026

Sri Lanka

அனோஜன் விடுதலை: அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் கைவிட சவுதிதீர்மானம்

முகநூல் (Facebook) பதிவு ஒன்றின் காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு எதிரான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் கைவிட சவுதி அரேபிய அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார். வெளிவிவகார அமைச்சரின் கூற்றுப்படி, அனோஜனுக்கு எதிராக எஞ்சியிருந்த சட்ட நடவடிக்கைகளைத் தொடர்வதில்லை என்றும், அவரை வழக்கு விசாரணைகளிலிருந்து விடுவிப்பதாகவும் சவுதி அரேபியாவின் (Public Prosecution) 2026 நவம்பர் 9 அன்று தீர்மானித்துள்ளது.

Sri Lanka

இன்றும் கன மழைக்கு வாய்ப்பு

ல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் இன்று (12) பிற்பகல் வேளையில் 100 மி.மீ க்கும் அதிக அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என திணைக்களம் வௌியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ […]

Sri Lanka

நான்கு நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, விமல் சுரேந்திர, லக்சபான, கெனியன் மற்றும் மேல் கொத்மலை ஆகிய நான்கு நீர்த்தேக்கங்களும் வான் பாய்கின்றன. காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டுவதற்கு மேலும் நான்கு அடி மாத்திரமே எஞ்சியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தொடர் மழையால் ஆறுகள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன், சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் ஊடாகவும் நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், களனி கங்கை மற்றும் மகாவலி கங்கையின் […]

Sri Lanka

யாழ். அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கல்வி மற்றும் ஆராய்ச்சித் தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் அமெரிக்காவில் உள்ள தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் (Southern Illinois University) அறங்காவலர் குழுவிற்கும் இடையே ஐந்தாண்டு காலப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திடுவதற்கான அவசியமான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கூட்டுக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மூலம் கல்விசார் சிறந்து விளங்குதல், அறிவுப் பகிர்வு மற்றும் நட்புறவை மேம்படுத்துவதே இப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரதான நோக்கமாகும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரு பல்கலைக்கழகங்களும் […]

Sri Lanka

மண்டைதீவு புதைகுழி விவகார வழக்கு ஒத்திவைப்பு!

1990 களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தங்களிடமிருந்த சான்றுகளை நீதிமன்றில் சமர்ப்பித்தனர். எனினும், சம்பவம் இடம்பெற்றதாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் இராணுவ முகாம் இருந்தமைக்கான ஆதாரங்களையும் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அப்போது அங்கிருந்த இராணுவ […]

Sri Lanka

நுவரெலியா சுற்றுலா விடுதியில் இளம் பெண் படுகொலை

நுவரெலியா, மார்காஸ் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் (கபானா) பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பியூமி தில்ஷானி என்ற இளம் பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண், நுவரெலியா – தேரிப்பஹ பகுதியில் வசிக்கும் தனது 27 வயதுடைய காதலனுடன் கடந்த 07ஆம் திகதி குறித்த சுற்றுலா விடுதிக்கு வருகை தந்து, அறையை முன்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று (10) காலை குறித்த பெண் விடுதிக்குள் […]

Sri Lanka

ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் கிடைக்கும் சலுகைகள்…

எதிர்வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்படவுள்ள 2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நேற்று(10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்துத் தெரிவித்தார். அங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் மூன்று வருடங்களில் பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சியை எட்டுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றார். இதற்கமைய, இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதற்காக 2,000 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அத்துடன், பொருளாதார வளர்ச்சியை […]

Sri Lanka

யாழில் ‘மெட்ரோ பஸ்’ சேவை

யாழ்ப்பாண மாவட்டத்தில் நவீன பொதுப் போக்குவரத்துச் சேவையான Metro Bus சேவையை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நேற்று(10) விசேட கலந்துரையாடலும் வழித்தடங்களுக்கான கள ஆய்வும் முன்னெடுக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக, இன்று காலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) வட மாகாணப் பணிப்பாளர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள […]

Canada

Elizabeth Fry மையத்தில் என்ன நடந்தது?

ஒன்ராறியோவின் பேரி (Barrie, Ont.) மேப்பிள் அவென்யூவில் (Maple Avenue) அமைந்துள்ள ‘எலிசபெத் பிரை சொசைட்டி’ (Elizabeth Fry Society) கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 40 பெண்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். புகையைச் சுவாசித்ததால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நான்கு பேர் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதேவேளை, இத்தீ வைப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய 44 வயதுடைய பெண் ஒருவர் மீது தற்போது தீ வைப்புக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பேரி தீயணைப்பு மற்றும் அவசரக்காலச் […]

Sri Lanka

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து விபத்து – ஐவர் பலி

அனுராதபுரம், ரம்பேவ பகுதியில் இன்று (10) காலை A9 வீதியில் மூன்று பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர். இன்று காலை 10.30 மணியளவில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் F.U. வூட்லர் நியூஸ்வயருக்குத் தெரிவித்துள்ளார். SLTB பேருந்துகளில் ஒன்றின் பின்னால் பயணித்த தனியார் பேருந்தொன்று, பின்னர் […]

Tami Global News @2026. All Rights Reserved.