Some Populer Post

  • Home  
  • மண்டைதீவு புதைகுழி விவகார வழக்கு ஒத்திவைப்பு!
- Sri Lanka

மண்டைதீவு புதைகுழி விவகார வழக்கு ஒத்திவைப்பு!

1990 களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தங்களிடமிருந்த சான்றுகளை நீதிமன்றில் சமர்ப்பித்தனர். எனினும், சம்பவம் இடம்பெற்றதாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் இராணுவ முகாம் இருந்தமைக்கான ஆதாரங்களையும் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அப்போது அங்கிருந்த இராணுவ […]

1990 களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தங்களிடமிருந்த சான்றுகளை நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.

எனினும், சம்பவம் இடம்பெற்றதாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் இராணுவ முகாம் இருந்தமைக்கான ஆதாரங்களையும் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அப்போது அங்கிருந்த இராணுவ அதிகாரிகளின் விவரங்ககையும் சமர்ப்பிக்குமாறு இராணுவத்தினரிடம் கோரியிருந்த அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பொலிஸார், விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு மேலும் கால அவகாசம் கோரினர்.

இதன்போது, விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள், மேலதிக சாட்சியங்கள் மற்றும் தடயங்களை விரைவாகத் திரட்டி சமர்ப்பிக்க வேண்டுமெனக் கோரினர்.

இதையடுத்து, நீதிபதி எதிர்வரும் 2027 ஜனவரி 05 ஆம் திகதிக்கு வழக்கை மீள விசாரணைக்காக ஒத்திவைத்தார்.

இன்றைய விசாரணையில் காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம், அதன் பிராந்திய இணைப்பாளர் த.செல்வக்குமார், வேலணை பிரதேச சபை உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன், வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் உள்ளிட்டோர் முன்னிலையாகியிருந்தனர்.

குறித்த வழக்கு 2025 செப்டெம்பர் 17 ஆம் திகதி முதன்முறையாக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில், தொடர்ச்சியாக மேலதிக கால அவகாசம் கோரப்பட்டு வருவதால், நீண்டகாலமாகத் தீர்வு காணப்படாத மண்டைதீவு புதைகுழி விவகாரத்தின் விசாரணைகள் மேலும் தாமதமடைவது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.