Some Populer Post

  • Home  
  • மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: இருவரை தேடும் பொலிஸார்!
- Sri Lanka

மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: இருவரை தேடும் பொலிஸார்!

பத்தேகம, வவுலகல பகுதியில் நபர் ஒருவர் மற்றும் இரு பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற இந்த முக்கொலைச் சம்பவத்தில், காரில் வந்த இருவர், முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த ஆண் ஒருவரையும் இரு பெண்களையும் நோக்கி டி-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தக் குற்றம் தொடர்பில் பத்தேகம காவல்துறையினரும் எல்பிட்டிய பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவும் விசாரணைகளை […]

பத்தேகம, வவுலகல பகுதியில் நபர் ஒருவர் மற்றும் இரு பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற இந்த முக்கொலைச் சம்பவத்தில், காரில் வந்த இருவர், முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த ஆண் ஒருவரையும் இரு பெண்களையும் நோக்கி டி-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்தக் குற்றம் தொடர்பில் பத்தேகம காவல்துறையினரும் எல்பிட்டிய பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த​ நிலையில், இக்கொலைச் சம்பவத்துடனும் தொடர்புடைய மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் தற்போது அந்தப் பகுதியிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதால், அவர்களைக் கைது செய்ய முடியாமல்போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களாக 50 வயதான லத்து கோலித யசரத்ன டி சொய்ஸா மற்றும் 35 வயதான வதுதுர புத்தி மதுஷங்க குணசிரி ஆகிய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், பத்தேகம காவல்துறை பொறுப்பதிகாரியின் 071-8591480 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது பத்தேகம காவல்துறை நிலையத்தின் 091-2292222 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ உடனடியாகத் தெரிவிக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.