Some Populer Post

Month: November 2026

Sri Lanka

கொழும்பில் உணவகங்களின் தரத்தை உறுதி செய்ய அறிமுகமாகும் க்யூ.ஆர் முறை!

கொழும்பில் உணவகங்களின் உணவுத் தரம் தொடர்பில் முறைப்பாடு செய்ய புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாநகர சபையின் மக்கள் சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள உணவகங்களில் உணவின் தரம் தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்வதற்காக புதிய QR குறியீட்டு முறையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து உணவகங்களிலும் இந்த QR குறியீடு காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன், பொதுமக்கள் அதனை ‘ஸ்கேன்’ செய்து, அதில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதன் […]

Sri Lanka

ரயில் கடவைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ மாணவி

24 வயதுடைய இளம் மருத்துவ மாணவி ஒருவரின் சடலம் காலி, கிந்தொட்டை பகுதியில் உள்ள புகையிரதப் பாதைக்கு அருகில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெலியத்தை பகுதியைச் சேர்ந்த யுத்மினி என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் காலி, கராப்பிட்டிய மருத்துவ பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி பயின்று வந்துள்ளார். கடந்த நவம்பர் 3ஆம் திகதி காலை 7.30 மணியளவில் குறித்த மாணவியின் சடலம் புகையிரதப் பாதைக்கு அருகில் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான […]

Sri Lanka

ஏ-9 வீதியில் பயங்கர விபத்து

யாழ்ப்பாணம் – கண்டி ஏ-9 பிரதான வீதியின் மெதவாச்சிப்ப பியூஸ்வெவ பகுதியில், மோட்டார் காரும் தனியார் பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்; மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகப் பியூஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்றும், வவுனியாவிலிருந்து மஹவ நோக்கிச் சென்ற மோட்டார் காருமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. பியூஸ்வெவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளின் போது, கார் ஓட்டுநருக்குத் தூக்கம் ஏற்பட்டமையே இந்த […]

Sri Lanka

கோடிகளில் நிதி மோசடி: வங்கி முகாமையாளர்கள் இருவர் கைது

இலங்கையின் முன்னணி வங்கிகள் இரண்டில் பெருந்தொகையான நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இரு வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கொட்டாஞ்சேனை மற்றும் கஹவத்த ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வங்கி நிதி நிறுவனங்களின் கிளை முகாமையாளர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொழும்பு மத்திய […]

Sri Lanka

வீட்டின் அருகே திடீரென சரிந்த நிலம் – வெளியேறிய குடும்பம்!

பதுளை மாவட்டம், பண்டாரவளை – லியன்கஹவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (05) காலை சுமார் 9.30 மணியளவில் குறித்த வீட்டின் சமையலறை மற்றும் மலசலகூடம் அமைந்துள்ள பகுதிகளுக்கு இடையிலான நிலப்பகுதி திடீரென சரிந்து விழுந்துள்ளது. குறித்த வீட்டில் தாய், தந்தை மற்றும் அவர்களது ஆண் பிள்ளை என மூவர் வசித்து வருகின்றனர். எனினும், இந்தச் சம்பவத்தில் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Breaking News Sri Lanka

முள்ளியவளையில் மாவீரர் நினைவேந்தல் ஏற்பாடுகள்!

தாயகத்தின் விடுதலைக்காகத் தங்களது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள், வழக்கம்போல இவ்வாண்டும் நவம்பர் 27ஆம் திகதி தமிழர் தாயகப் பகுதிகள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளன. இதனையொட்டி, தாயகப் பகுதிகளிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களைச் துப்புரவு செய்யும் சிரமதானப் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் துயிலும் இல்லப் பணிக்குழுவினர், மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து […]

Canada

இடைக்காலத் தேர்தல்களின் போது அதிகம் தேடப்பட்ட நாடாக கனடா!

கூகுள் டிரெண்ட்ஸ் (Google Trends) அறிக்கை ஒன்றின்படி, இடைக்காலத் தேர்தல்கள் குறித்து அமெரிக்காவை விட கனடாவில்தான் மற்றைய நாடுகளைக் காட்டிலும் அதிகமான தேடல் ஆர்வம் காணப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்குப் பிறகு, தேர்தல்கள் தொடர்பான தேடல்களில் கனடா முதலிடத்தைப் பிடித்தது; அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, ஆஸ்திரியா, சிங்கப்பூர் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. கூகுளின் அறிக்கையின்படி, கனடாவின் முக்கிய வர்த்தகப் பங்காளியான மிச்சிகன் மாநிலத்தின் தேர்தல் முடிவுகளே அதிக அளவில் தேடப்பட்டுள்ளன. கனடாவுடன் எல்லையைப் […]

Canada

2027 ஆம் ஆண்டில் குறைவான புலம்பெயர்வோரை வரவேற்கக் கனேடியர்கள் விருப்பம்!

புலம்பெயர்வு அளவுகளையும், வீட்டு வசதி, சேவைகள் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் அவற்றின் தாக்கத்தையும் நாடு தொடர்ந்து எதிர்கொண்டு வருவதால், அடுத்த 2027 நாட்டிற்குள் குறைவான புலம்பெயர்வோர்களையும் தற்காலிக வசிப்பவர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பெரும்பான்மையான கனேடியர்கள் விரும்புவதாக CTV News-க்காக நானோஸ் ரிசர்ச் (Nanos Research) நடத்திய புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. புலம்பெயர்வு அளவுகளை ‘நிலையான மட்டங்களில்’ மதிப்பிடுவதற்காகவும் பராமரிப்பதற்காகவும் தான் மாகாண முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களுடன் பேசி வருவதாகப் பிரதமர் கார்னி (Carney) கூறுகிறார். […]

Sri Lanka

அறக்கட்டளைகள் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

அறக்கட்டளைகள் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு திருத்தங்கள் ஏதுமின்றி நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய, 1917 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க அறக்கட்டளைகள் கட்டளைச் சட்டத்திலேயே இவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. குறித்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பும் திருத்தங்கள் ஏதுமின்றி நிறைவேற்றப்பட்டது. பணச்சலவை மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலைத் தடுப்பது தொடர்பான நிதி நடவடிக்கை பணிக்குழுவினால் (FATF) முன்வைக்கப்பட்ட அவதானிப்புகளின் அடிப்படையில், இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவின் யோசனைகளுக்கு அமைவாகவே இச்சட்டமூலத்தில் திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

Sri Lanka

ஜோர்தானில் இலங்கை தூதரகம் முன்பாக கூரிய ஆயுத தாக்குதல்

ஜோர்தானில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக ஜோர்தானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. அம்மான் நகரில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்னால் கூரிய ஆயுத தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஜோர்தானுக்கான இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும் தூதரக ஊழியர்கள் மற்றும் ஜோர்தானில் வாழும் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக ஜோர்தானுக்கான இலங்கைத் தூதரகம் […]

Tami Global News @2026. All Rights Reserved.