Some Populer Post

Month: November 2026

Sri Lanka

இலங்கை விமான படைக்கான மேலதிக ஒதுக்கம் நிறைவேற்றம்

இலங்கை விமானப் படைக்கு 4,261 மில்லியன் ரூபாயை வழங்குவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு பாராளுமன்றில்நேற்று(05) நடைபெற்ற விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரச நிதியத்தில் இருந்தோ அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமான வேறு ஏதேனும் நிதியிலிருந்தோ அல்லது அரசாங்கத்தினால் பெறப்படும் ஏதேனும் கடன் தொகையிலிருந்தோ இந்தத் தொகையை இலங்கை விமானப் படைக்கு வழங்குவதற்காக இந்த மேலதிக மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாறிவரும் செயல்பாட்டுச் சூழல், வங்காள விரிகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் […]

Tech Sports

சர்வதேச போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு!

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார். தனது இந்த ஓய்வு முடிவை வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். “போர்த்துக்கல் மக்களுக்கு. நமது தேசிய அணியின் 7-ஆம் எண் ஜெர்சியைக் கழற்றி வைக்கும் நேரம் வந்துவிட்டது. அது பிரத்தியேகமாக என்னுடையது என்று நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை, ஆனால் 23 ஆண்டுகளாக அதை அணியும் பாக்கியமும் பொறுப்பும் எனக்கு இருந்தது.” என வீடியோவில் உணர்ச்சிபொங்க பேசியுள்ளார். 41 வயதான ரொனால்டோ, போர்த்துக்கல் […]

Sri Lanka

குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் தடுப்பு காவல் உத்தரவு காலத்தை திருத்தம் செய்ய ஜனாதிபதி தயார்?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேகநபர்களைத் தடுத்து வைக்கும் காலத்தை 72 மணித்தியாலத்திலிருந்து 48 மணித்தியாலமாகக் குறைப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாடே ஒன்றாக தேசிய இயக்கத்தின் ஆன்மிக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். அத்துடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை அடையாளம் காண்பதற்காக ஏனைய நாடுகளில் பயன்படுத்தப்படும் ‘பச்சைக் குத்துதல்’ முறையானது எமது நாட்டிற்குத் தேவையில்லை என்றால், அந்த ஏற்பாட்டைச் சட்டத்திலிருந்து நீக்கிக் கொள்ளவும் தாம் […]

Canada

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவு; கனடியர்களுக்கு இது ஒரு வெற்றி!

அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல் முடிவானது கனடாவில் பலரும் எதிர்பார்த்த ஒன்றாக அமைந்தது. அதாவது, அமெரிக்காவின் நெருங்கிய வர்த்தக கூட்டாளிகள் மீது டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளை அமெரிக்க வாக்காளர்கள் நிராகரித்ததன் வெளிப்பாடாக ஜனநாயகக் கட்சியின் மாபெரும் வெற்றி பதிவாகியுள்ளது. புதன்கிழமை காலை மகிழ்ச்சியுடன் பேட்டியளித்த ஒன்ராறியோ மாகாணப்Premier டக் ஃபோர்ட் (Doug Ford), “இது கனடாவிற்கு கிடைத்த ஒரு வெற்றி” என்று வர்ணித்தார். செவ்வாய்க்கிழமை இரவின் இந்தத் தேர்தல் முடிவு, கனடாவிற்கு உடனடியாக எந்தவொரு வரி நிவாரணத்தையும் […]

Sri Lanka

பண மோசடி; நீதிமன்றால் 12 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்த பெண் கைது

வெளிநாட்டிற்கு அனுப்பிவைப்பதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காது தலைமறைவாகியிருந்த நிலையில், அவருக்கு எதிராக வெலிசறை நீதவான் நீதிமன்றத்தினால் 12 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ராகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (04) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிங்கெந்த பகுதியில் வைத்து சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் ராகம பகுதியைச் […]

Sri Lanka

TIN இலக்க கட்டாயமாக்கல் 2027 ஏப்ரல் வரை ஒத்திவைப்பு

குறிப்பிட்ட சில சேவைகளுக்காக TIN இலக்கத்தைக் (வரி செலுத்துபவர் அடையாள இலக்கம்) கட்டாயமாக்கும் நடைமுறையை அமுல்படுத்துவது 2027 ஏப்ரல் 1 ஆம் திகதி வரை ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Sri Lanka

பிற நாடுகளின் கடல் எல்லைகளில் கைதான 795 மீனவர்களில் 753 பேர் 66 படகுகளுடன் விடுவிப்பு

பிற நாடுகளின் பிரத்தியேக பொருளாதார வலயங்களுக்குள் பிரவேசித்தமை காரணமாக, 2020 ஆம் ஆண்டு முதல் 2026 ஒக்டோபர் 23 ஆம் திகதி வரை 145 மீன்பிடிப் படகுகளுடன் 795 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 753 மீனவர்கள் 66 மீன்பிடிப் படகுகளுடன் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்கள் வாய்மூல விடைக்காக முன்வைத்த கேள்விகளுக்காக கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் […]

Sri Lanka

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராக போராட்டம்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை (Protection of the State from Terrorism) உடனடியாக மீளப்பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்தனர். கட்டுநாயக்க அவறிவத்த நகரில் நேற்று (04) மாலை 5 மணிக்கு இந்தப் போராட்டம் நடைபெற்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறிவரும் அரசாங்கம், அதற்குப் பதிலாகப் புதிய சட்டமூலமொன்றைக் கொண்டுவர முயற்சிப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர். புதிய சட்டமூலத்தில் பாதுகாப்புச் செயலாளருக்கு அதிக அதிகாரங்களை வழங்குதல், […]

World

அமெரிக்க செனட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம்!

மிச்சிகன் மாநிலத்தின் காலியாக உள்ள அமெரிக்க செனட் இடத்திற்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அப்துல் எல்-சயத் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் பிரதிநிதி என்ற வரலாற்றைப் படைத்துள்ள அவர், செனட் சபையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கான ஜனநாயகக் கட்சியின் போராட்டத்தில் முக்கியமான ஒரு இடத்தையும் தக்கவைத்துள்ளார். கடும் போட்டி நிறைந்த இத்தேர்தலில் எல்-சயதின் வெற்றி, ஜனநாயகக் கட்சியின் முற்போக்கு பிரிவுக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. மேலும் ஓய்வுபெறும் ஜனநாயகக் […]

Sri Lanka

ரகித்த ராஜபக்ஷவின் வங்கி கணக்குகளுக்கு 3 மாத தடை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் அண்மையில் முடக்கப்பட்ட, சட்டத்தரணி ரகித்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான வங்கிச் கணக்குகள் மற்றும் வாகனங்களை மூன்று மாத காலத்திற்குச் தடைவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட காரணங்களை ஆராய்ந்த பின்னரே, கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Tami Global News @2026. All Rights Reserved.