Some Populer Post

Month: September 2026

Sri Lanka

இலங்கைக்கான ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் 2026 பயிற்சித் திட்டங்கள் ஆரம்பம்

இலங்கைக்காக ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தினால் 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் பயிற்சித் திட்டங்களின் தொடரை ஆரம்பித்து வைக்கும் வகையில், அதன் தொடக்கப் பயிற்சி நெறி திங்கட்கிழமை (21) திருகோணமலை சிறப்புப் படகுப் படைப் பயிற்சிப் பள்ளியில் ஆரம்பமானது. கடல்சார் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்காக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களின் திறன்களை வலுப்படுத்துவது இந்தப் பயிற்சித் திட்டங்களின் முக்கிய நோக்கமாகும். அத்துடன், ஒருங்கிணைக்கப்பட்ட குற்றவியல் நீதி முறைமையின் ஊடாக […]

Sri Lanka

அனோஜனின் விடுதலை கோரி திருகோணமலையில் தொடரும் அமைதியான ஒன்றுகூடல்

சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி, இன்று (21) மாலை திருகோணமலை நகரில் அமைதியான முறையில் ஒன்றுகூடல் இடம்பெற்றது. திருகோணமலை கடற்கரை காந்தி சிலை அருகே இடம்பெற்ற இந்த ஒன்றுகூடல், அனோஜனுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும் வரை தினமும் மாலை நேரங்களில் தொடர்ந்து நடத்தப்படும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அனோஜனின் விடுதலைக்காக முன்னெடுக்கப்படும் இந்த முயற்சிக்கு இயலுமானவர்கள் நேரில் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வழங்குமாறும் ஏற்பாட்டுக் குழுவினர் […]

Sri Lanka

இரவு 9 மணிக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு காத்திருக்கு தீர்ப்பு..!

15 குற்றவாளிகளின் தண்டனையை குறைப்பது தொடர்பில் அவர்களின் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் கேட்டறிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அரச தரப்பு சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிசிட்டர் ஜெனரல், குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட வேண்டிய தண்டனை தொடர்பான தமது வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர், வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று(22) இரவு 9 மணிக்கு அறிவிக்கப்படும் என மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தெரிவித்துள்ளது. முதலாம் இணைப்பு 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற […]

Sri Lanka

அதிரடியாக களமிறங்கிய புலனாய்வாளர்கள்!

2022 ஆம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சிக்குக் கடன் சுமை மற்றும் பொருளாதார தவறான நிர்வாகம் மட்டும் காரணமல்ல, ஊழல் மற்றும் நேர்மையின்மையுமே பிரதான காரணங்களாக அமைந்தன என இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார். வோஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சட்டத் திணைக்களத்தின் 80 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வின் போது நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது அவர், […]

Sri Lanka

இலங்கையின் கடவுச்சீட்டு 169ஆவது இடம்!

உலகளவில் கடவுச்சீட்டுகளின் பலம் மற்றும் விசா அணுகலைத் துல்லியமாக மதிப்பிடும் ‘பாஸ்போர்ட் ரிப்போர்ட்ஸ்’ (Passport Reports) தளம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, சர்வதேச அளவில் இலங்கையின் கடவுச்சீட்டு 169ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கையின் கடவுச்சீட்டு 53 நகர்வு மதிப்பெண்களைப் (Mobility score) பெற்றுள்ளது. இதன் மூலம் இலங்கை கடவுச்சீட்டு வைத்துள்ளவர்கள் 15 நாடுகளுக்கு விசா இன்றியும், 34 நாடுகளுக்கு வருகைக்கால விசாவிலும் (Visa on Arrival), 4 நாடுகளுக்கு மின்னணு பயண அனுமதி (ETA) மூலமாகவும் பயணம் செய்ய […]

Sri Lanka

குறைந்த தங்க விலை!

நேற்று (21) 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 374,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலையில் 1,000 ரூபாய் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 373,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 343,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,625 […]

Sri Lanka

நாட்டின் பல பகுதிகளில் மழை!

அடுத்த 24 மணித்தியாலத்திற்குள் நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகும். மேலும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.

Sri Lanka

அனோஜனுக்காக தீவிர முயற்சி !

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜன் சிவராசாவை காப்பாற்றுவதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அனோஜன் சிவராசா தொடர்பான சம்பவம் குறித்து தகவல் கிடைத்த நாள் முதல், இராஜதந்திர மட்டத்திலும் இலங்கையின் வெளிநாட்டு தூதரகங்களின் ஊடாகவும் தேவையான தலையீடுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அவரை […]

Sri Lanka

பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கி சூடு- மூவர் கைது -போதைப்பொருள் மீட்பு

கிரியுல்லையில் பொலிஸார் நிறுத்துமாறு உத்தரவிட்டபோதிலும் அதனை மீறி பயணித்த காரி;ன் சக்கரத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து காரை நிறுத்திய பொலிஸார் அதில் பயணம் செய்த இரண்டு பெண்கள் உட்பட மூவரை கைதுசெய்துள்ளனர். போதைப்பொருள் கடத்தலுக்கு கார் ஒன்றினை பயன்படுத்துகின்றனர் என கிடைத்த தகவலின் பேரில் இந்த வாகனத்தை காவல்துறையினர் அடையாளம் கண்டனர். எனினும் வாகனத்தை நிறுத்துமாறு பொலிஸார் பிறப்பித்த உத்தரவினை புறக்கணித்த வாகனசாரதி வாகனத்தை வேகமாக செலுத்தி தப்பிசெல்ல முயன்றார். இதனை தொடர்ந்து வாகனத்தை பின்தொடர்ந்து […]

Sri Lanka

சந்நிதியான் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் இளைப்பாறும் நிழற்குடை இடித்தழிப்பு

யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறை பகுதியில் வீதியில் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த சட்டவிரோத கட்டடம் இடித்து அகற்றப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட செல்வ சந்நிதி ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீதியில் , வீட்டின் வெளியே அனுமதியின்றி நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது. குறித்த நிழற்குடையின் கீழ் ஆலயத்திற்கு செல்வோர் இளைப்பாறி சென்றனர். இந்நிலையில் குறித்த நிழற்குடை நகர சபையின் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாகவும் , அதனை அகற்றுமாறு உரிமையாளருக்கு நகர சபையினால் கால அவகாசம் கொடுத்து அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது. அவற்றை அகற்ற […]

Tami Global News @2026. All Rights Reserved.