Some Populer Post

  • Home  
  • அனோஜனின் விடுதலை கோரி திருகோணமலையில் தொடரும் அமைதியான ஒன்றுகூடல்
- Sri Lanka

அனோஜனின் விடுதலை கோரி திருகோணமலையில் தொடரும் அமைதியான ஒன்றுகூடல்

சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி, இன்று (21) மாலை திருகோணமலை நகரில் அமைதியான முறையில் ஒன்றுகூடல் இடம்பெற்றது. திருகோணமலை கடற்கரை காந்தி சிலை அருகே இடம்பெற்ற இந்த ஒன்றுகூடல், அனோஜனுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும் வரை தினமும் மாலை நேரங்களில் தொடர்ந்து நடத்தப்படும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அனோஜனின் விடுதலைக்காக முன்னெடுக்கப்படும் இந்த முயற்சிக்கு இயலுமானவர்கள் நேரில் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வழங்குமாறும் ஏற்பாட்டுக் குழுவினர் […]

சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி, இன்று (21) மாலை திருகோணமலை நகரில் அமைதியான முறையில் ஒன்றுகூடல் இடம்பெற்றது.

திருகோணமலை கடற்கரை காந்தி சிலை அருகே இடம்பெற்ற இந்த ஒன்றுகூடல், அனோஜனுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும் வரை தினமும் மாலை நேரங்களில் தொடர்ந்து நடத்தப்படும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அனோஜனின் விடுதலைக்காக முன்னெடுக்கப்படும் இந்த முயற்சிக்கு இயலுமானவர்கள் நேரில் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வழங்குமாறும் ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இன்றைய ஒன்றுகூடலில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.