Some Populer Post

  • Home  
  • இலங்கைக்கான ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் 2026 பயிற்சித் திட்டங்கள் ஆரம்பம்
- Sri Lanka

இலங்கைக்கான ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் 2026 பயிற்சித் திட்டங்கள் ஆரம்பம்

இலங்கைக்காக ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தினால் 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் பயிற்சித் திட்டங்களின் தொடரை ஆரம்பித்து வைக்கும் வகையில், அதன் தொடக்கப் பயிற்சி நெறி திங்கட்கிழமை (21) திருகோணமலை சிறப்புப் படகுப் படைப் பயிற்சிப் பள்ளியில் ஆரம்பமானது. கடல்சார் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்காக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களின் திறன்களை வலுப்படுத்துவது இந்தப் பயிற்சித் திட்டங்களின் முக்கிய நோக்கமாகும். அத்துடன், ஒருங்கிணைக்கப்பட்ட குற்றவியல் நீதி முறைமையின் ஊடாக […]

இலங்கைக்காக ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தினால் 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் பயிற்சித் திட்டங்களின் தொடரை ஆரம்பித்து வைக்கும் வகையில், அதன் தொடக்கப் பயிற்சி நெறி திங்கட்கிழமை (21) திருகோணமலை சிறப்புப் படகுப் படைப் பயிற்சிப் பள்ளியில் ஆரம்பமானது.

கடல்சார் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்காக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களின் திறன்களை வலுப்படுத்துவது இந்தப் பயிற்சித் திட்டங்களின் முக்கிய நோக்கமாகும். அத்துடன், ஒருங்கிணைக்கப்பட்ட குற்றவியல் நீதி முறைமையின் ஊடாக பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கூட்டுப் பயிற்சித் திட்டங்களின் முதல் பயிற்சித் திட்டமாக ஆரம்பமான, படகுகளில் ஏறுதல், சோதனையிடுதல், கைது செய்தல் மற்றும் மறைக்கப்பட்ட பகுதிகளைச் பரிசோதிக்கும் முறைகள் தொடர்பான பயிற்சி நெறி 2026 ஒக்டோபர் 02 ஆம் திகதி வரை இரண்டு வார காலத்திற்கு நடைபெறவுள்ளது. இதற்காக பங்களாதேஷைப் பிரதிநிதித்துவப்படுத்தி எட்டு (08) உறுப்பினர்களும், மாலைதீவைப் பிரதிநிதித்துவப்படுத்தி எட்டு (08) உறுப்பினர்களும், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி எட்டு (08) கடற்படை அதிகாரிகளும், மூன்று (03) இலங்கை சுங்க அதிகாரிகளும் மற்றும் இலங்கை பொலிஸாரைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு (02) அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இப்பயிற்சி நெறியின் மூலம் பாதுகாப்பான செயல்பாட்டு முறைகள், படகுகளில் ஏறும் நடைமுறைகள், ஏறும் குழுவின் கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்பு, தனிநபர் சோதனை மற்றும் தடுத்து வைத்தல், படகுகளை அடையாளம் காணுதல், கப்பல் ஆவணங்களைச் பரிசோதித்தல், கப்பல்களைச் சோதனையிடும் முறைகள், சான்றுகள் பற்றிய விழிப்புணர்வு, ஏறும் உபகரணங்களைப் பயன்படுத்தும் முறைகள், நிலையான மற்றும் நகர்ந்து கொண்டிருக்கும் படகுகளில் ஏறுதல், படகுகளைப் பரிசோதித்தல் மற்றும் மறைக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் கண்டு சோதனையிடுதல் ஆகியன தொடர்பான முதன்மை மற்றும் செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

மேலும், இந்தப் பயிற்சித் தொடரின் தொடக்க விழாவில் சிறப்புப் படகுப் படையின் கட்டளை அதிகாரி கொமாண்டர் லக்மால் வீரக்கொடி, சிறப்புப் படகுப் படைப் பயிற்சிப் பள்ளியின் பயிற்சி நிர்வாகி மற்றும் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் படகுகளில் ஏறுதல், சோதனையிடுதல் மற்றும் கைது செய்தல் முறைகள் பற்றிய முதன்மை ஆலோசகர் திரு. ஜோஹன் ஹென்றிக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.