Some Populer Post

  • Home  
  • அடுக்குமாடி குடியிருப்பில் தீ!
- Sri Lanka

அடுக்குமாடி குடியிருப்பில் தீ!

மொரட்டுவை, சொய்சாபுர வீட்டுத் தொகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒரு பகுதியில் ஏற்பட்ட இந்தத் தீப்பரவல் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, தீப்பரவலில் சிக்கிய ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மேலும் இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. […]

மொரட்டுவை, சொய்சாபுர வீட்டுத் தொகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒரு பகுதியில் ஏற்பட்ட இந்தத் தீப்பரவல் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, தீப்பரவலில் சிக்கிய ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மேலும் இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தீப்பரவலுக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.