Some Populer Post

Month: September 2026

Sri Lanka

இலங்கை – இந்திய மீனவ பேச்சு மறுஅறிவித்தல் வரை பிற்போடல்

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை மறுஅறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையானது இன்று(25) இந்தியாவில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபடுவது, அவ்வாறு இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது உள்ளிட்ட நீண்டகாலமாக நிலவி வரும் மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடுவதற்காக இந்தப் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், இந்தியத் தரப்பில் […]

Sri Lanka

அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்!

சவுதியில் உள்ள அனோஜன் பதிவிட்ட கருத்திற்காக அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையை சவுதி அரசாங்கத்திடம் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கின்றோம் என மன்னாரில் இன்று (24) மாலை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சர்வ மத தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் விசேட ஊடக சந்திப்பு இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் சர்வமத பேரவையின் தலைவர் சிவ சிறி தர்மகுமார குருக்கள், […]

Breaking News Chemmani News Sri Lanka

செம்மணியின் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான மனித எச்சங்கள்; சாத்தியமான குற்றவியல் நிகழ்வே – ஜஸ்மின் சூக்கா

செம்மணியில் நூற்றுக்கணக்கான மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டது வெறும் தொல்பொருள் அல்லது தடயவியல் நிகழ்வல்ல. அது ஒரு சாத்தியமான குற்றவியல் நிகழ்வாகும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழி குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பலவந்தமாக காணாமலாக்கப்படும் குற்றமானது ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதற்காகவே முன்னெடுக்கப்படுகின்றது.இது ஒரு நபரை சட்டத்தின் பாதுகாப்பிலிருந்து அகற்றுவதோடு அவர்களின் விதியையும் இருப்பிடத்தையும் மறைக்கின்றது. அதேநேரத்தில் குடும்பங்கள்வாழ்வின் நிச்சயமற்ற தன்மை மரணத்தின் இறுதிதன்மை […]

Sri Lanka

கிளிநொச்சியில் சோழன் உலக சாதனை

​கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி பயிலும், பிரஷாந்தினி நர்த்தனாலயத்தின் பரதநாட்டிய மாணவி செல்வி பி.எல். றெஜிஸ் றெஜிஸ்ரிகாவின் சோழன் உலக சாதனை பரதநாட்டிய நிகழ்வு கிளிநொச்சி, கே.கே மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. ​றெஜிஸ் றெஜிஸ்ரிகா தனது 9 ஆவது வயதில் தொடர்ச்சியாக ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக பரதநாட்டியம் ஆடி, சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இது இவரது 3 ஆவது உலக சாதனையாக அமைந்துள்ளது. ​இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் […]

India

“நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் தலைவர்கள் நீக்கப்பட்டது ஏன்?” – அமைச்சர் வன்னி அரசு விளக்கம்!

தவெக இடைத்தேர்தல் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் முக்கிய தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து விசிகவின் மூத்த தலைவரும், சமூக நீதித்துறை அமைச்சருமான வன்னி அரசு விளக்கமளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையை அடுத்த கொடுக்கூர் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த ஏ.குமாரமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை அமைச்சர் வன்னி அரசு இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் […]

Sri Lanka

யாழ்ப்பாண முஸ்லிம்களும் அனோஜனின் விடுதலைக்காக குரல் கொடுக்கின்றோம்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை விடுவிக்க வேண்டும் என்ற தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான கோரிக்கையோடு, யாழ்ப்பாண முஸ்லிம் மக்களும் முழுமையாகக் கை கோர்ப்பதாக யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர் என்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சகோதரர் சிவராசா அனோஜன் குற்றம் தொடர்பில் நாம் பேசுவதை விட, […]

Sri Lanka

அனோஜனின் விடுதலைக்காக இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்கத் தூதரக அதிகாரியை சந்தித்த தமிழரசுக் கட்சி!

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜனின் விடுதலைக்கான முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், நேற்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் Anthony V. Pirnot ஆகியோரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துக் கலந்துரையாடினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், பாராளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும், தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் […]

Sri Lanka

நாமலுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 30ஆம் திகதி வரை நாமல் ராஜபக்‌சவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய எயார்பஸ் வானூர்தி கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Sri Lanka

பல டொலர்களைத் தாண்டிய ஏற்றுமதி!

2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இதன்படி, ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் மொத்த ஏற்றுமதி வருமானம் 12.01 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 11.52 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 4.26 சதவீத வளர்ச்சியாகும். இந்தக் காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகிய இரு ஏற்றுமதித் […]

Sri Lanka

அடுக்குமாடி குடியிருப்பில் தீ!

மொரட்டுவை, சொய்சாபுர வீட்டுத் தொகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒரு பகுதியில் ஏற்பட்ட இந்தத் தீப்பரவல் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, தீப்பரவலில் சிக்கிய ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மேலும் இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. […]

Tami Global News @2026. All Rights Reserved.