Some Populer Post

  • Home  
  • மண்சரிவு அபாய எச்சரிக்கை!
- Sri Lanka

மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்காக விடுக்கப்பட்டமண்சரிவு அபாய எச்சரிக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது.   இன்று மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்த எச்சரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.   இதன்படி  பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல, கண்டி மாவட்டத்தின் யட்டிநுவர, ஹதரலியத்த, பாஸ்பாகே கோரளை (புதிதாக இணைக்கப்பட்டுள்ளது), கங்க இஹல கோரளை, தும்பனை, உடபலாத, உடுதும்பர மற்றும் உடுநுவர, கேகாலை மாவட்டத்தின் […]

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்காக விடுக்கப்பட்டமண்சரிவு அபாய எச்சரிக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

 

இன்று மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்த எச்சரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 

இதன்படி  பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல, கண்டி மாவட்டத்தின் யட்டிநுவர, ஹதரலியத்த, பாஸ்பாகே கோரளை (புதிதாக இணைக்கப்பட்டுள்ளது), கங்க இஹல கோரளை, தும்பனை, உடபலாத, உடுதும்பர மற்றும் உடுநுவர, கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கனை, கலிகமுவ, அரநாயக்க மற்றும் மாவனெல்ல, நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை மேற்கு, நில்தண்டாஹின்ன, அம்பகமுவ கோரளை, வலப்பனை மற்றும் ஹங்குரன்கெத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ளவர் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு, முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை, முன்னதாக இரண்டாம் நிலை (செம்மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன, வலப்பனை, ஹங்குரன்கெத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் தற்போது ஒரு படி கீழிறக்கப்பட்டு, முதலாம் நிலை (மஞ்சள்) எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.