அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஆபத்தானது என நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இன்று(28.11.2026) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை’ மறுபரிசீலனை செய்யுமாறு அவர் கோரியுள்ளார்.
இச்சட்டமூலத்தின் சரத்துக்கள் அரசியல் சுதந்திரம், தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் ஊடகவியலாளர்களின் உரிமைகளைப் பாதிக்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாக அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA), பின்னர் திருத்தச் சட்டத்தின் மூலம் நிரந்தரமாக்கப்பட்டு பொதுமக்களின் சுதந்திரத்திற்குப் பெரும் சவாலாக அமைந்திருந்ததாகச் சுட்டிக்காட்டினார்.


