Some Populer Post

  • Home  
  • வீரத்தின் அடையாளமாய் தியாகத்தின் வரலாறாய் வாழும் மாவீரர்கள்! Behind Me Media தலைமை அலுவலக நிகழ்வுகள்…
- Breaking News - Canada

வீரத்தின் அடையாளமாய் தியாகத்தின் வரலாறாய் வாழும் மாவீரர்கள்! Behind Me Media தலைமை அலுவலக நிகழ்வுகள்…

2026 மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் நவம்பர் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை முதல் 2284 Argentia Road, Unit 16, Mississauga, Ontario வில் அமைந்துள்ள Behind Me Media தலைமை அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. மாவீரர் வாரமான நவம்பர் 21 ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளும் இங்கே செய்யப்பட்டிருந்தன […]

2026 மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் நவம்பர் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை முதல் 2284 Argentia Road, Unit 16, Mississauga, Ontario வில் அமைந்துள்ள Behind Me Media தலைமை அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மாவீரர் வாரமான நவம்பர் 21 ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளும் இங்கே செய்யப்பட்டிருந்தன என்பதோடு தமிழீழத் தேசியக்கொடி நாள் மற்றும் மாவீரர் வார ஆரம்ப நிகழ்வுகள் கடந்த 21ஆம் திகதி மிசிசாகா நகர மேயர் Alvin Tedjo மற்றும் முக்கிய அரச பிரமுகர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர் வார ஆரம்ப நிகழ்வில் கனேடிய மற்றும் தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டு மாவீரர் வார நினைவேந்தல் அங்குரார்ப்பண நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நேற்றைய மாவீரர் நாள் நிகழ்வில் பேச்சு, கவிதை, தலைவர்களின் உரை மற்றும் நினைவேந்தல் என்பன நடைபெற்றன.

Behind Me Media நிறுவனரும் அதன் தலைவருமான கணா செல்வா அவர்கள் தனது உரையில், மின்சார வசதியில்லாத காலத்தில் வானொலியின் ஊடாக எமது தேசியத்தலைவர் அவர்களின் உரையை நாம் கேட்டிருக்கின்றோம். உண்மையில் அவர் ஒரு தீர்க்கதரிசி… எல்லாக் காலத்திலும் எமது மக்கள் ஒன்றுபட்டு மாவீரர்களை நினைவு கூர்வார்கள் என்பதில் மிகத் தெளிவாக இருந்திருக்கின்றார் என்பதை ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் எம்மால் உணர முடிகின்றது என்றார்.

தியாகத்தின் வரலாறாக வாழ்ந்து கொண்டிருக்கும் மாவீரர்களை Behind Me Media வின் ஊடாக நினைவு கூருவதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருப்பது எமக்குக் கிடைத்த பெரும் பேறு. கடந்த 21ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கு தொலை தூரங்களிலிருந்து பலர் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றிருக்கின்றார்கள். முதல் மாவீரனான சங்கர் அண்ணா அவர்கள் தொடர்பான ஆவணத்தொகுப்பை நாம் வெளியிட்டிருந்தோம். இங்கே சகல வயதுகளைச் சேர்ந்தவர்களும் வருகை தந்து கொண்டிருக்கின்றார்கள். எமது வரலாற்றை சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு நாம் கட்டாயம் அறியப்படுத்த வேண்டும்.

எம்மால் முடிந்தளவுக்கு மாவீரர்களின் திருவுருவப் படங்களை இங்கே காட்சிப்படுத்தியுள்ளோம். விடுபட்டவர்களின் படங்கள் குறித்து அறியத்தரும்போது உடனுக்குடன் அவற்றை நாம் இணைத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி என கணா செல்வா அவர்கள் மேலும் தெரிவித்தார்.

மாவீரர் வாரத்தின் முதல்நாளிலிருந்து ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், மாவீரர் குடும்பங்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள்… என பல சமூக மட்டத்திலிருந்தும் பலர் வருகை தந்து Behind Me Media வினால் ஒழுங்குசெய்யப்பட்ட ‘மாவீரர் நினைவேந்தல்’ நிகழ்வைக் காத்திரப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.