Some Populer Post

Month: September 2026

Breaking News Sri Lanka

வரலாறாகிய தியாக தீபம்…

தமிழீழ மக்களின் நியாயமான ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, சொட்டு நீரும் அருந்தாமல் 12 நாட்கள் அறப்போராட்டம் நடத்தி, 1987-இல் தன் இன்னுயிரை ஈந்த தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (செப்டம்பர் 26). நல்லூர் மண்ணில் அகிம்சை வழியில் முன்னெடுத்த அந்த உண்ணா நோன்பு, அவரது தனிப்பட்ட தியாகமாக மட்டுமல்லாது, தமிழ் மக்களின் அரசியல் மற்றும் உரிமைக் கோரிக்கைகளை வெளிப்படுத்திய ஒரு வரலாற்றுச் சம்பவமாகவும் பதிவாகியுள்ளது. […]

Canada

Toronto தேர்தல் களம்: பின்னால் இருந்து இயக்கும் ‘நிழல் அமைப்புகள்’ 

டொரண்டோ மாநகராட்சித் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடும் வேட்பாளர்களைக் காட்டிலும், அவர்களுக்குப் பின்னால் இருந்து செயல்படும் மறைமுக அரசியல் அமைப்புகளே தேர்தலின் முடிவுகளைத் தீர்மானிப்பதாக மூத்த பத்திரிகையாளர் மால்கம் ஜான்ஸ்டன் கவலை தெரிவித்துள்ளார். பாரம்பரியமாக டொரண்டோ மாநகராட்சி அரசியலானது எந்தக் கட்சியையும் சாராத, சுயாதீனமான முறையில் இயங்கி வந்தது. ஆனால், அமெரிக்க பாணியிலான அரசியல் களம் இப்போது டொரண்டோவிலும் உருவெடுத்துள்ளது குறித்து அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: புரோகிரெஸ் டொரண்டோ : 2018-இல் தொடங்கப்பட்ட இந்த […]

Sri Lanka

22 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

நீதித்துறை திருத்தச் சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு நேற்று (25) பாராளுமன்றில் திருத்தங்கள் ஏதுமின்றி 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதன்போது, இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இதற்கமைய, நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் மதிப்பீடு திருத்தங்கள் இன்றி 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். அதேநேரம் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் மதிப்பீடு […]

Sri Lanka

ஷிராந்தி FCID க்கு கடிதம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் பாரியாரான ஷிராந்தி ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க பிறிதொரு தினத்தை கோரியுள்ளார். அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஒருவர் கடிதம் மூலம் அப்பிரிவுக்கு இதனை அறியப்படுத்தியுள்ளார். மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அவர் வெளிநாடு சென்றுள்ளதால் இச்சமயத்தில் அப்பிரிவில் ஆஜராகுவதற்கான வாய்ப்பில்லை எனவும், நாடு திரும்பியவுடன் அதில் முன்னிலையாகி வாக்கு மூலம் வழங்க தயாராக இருப்பதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிரிலிய சவிய நிதியத்துடன் தொடர்புடைய கணக்கில் […]

Sri Lanka

சிறுநீரக ​வைத்தியசாலையில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு!

பொலன்னறுவை சிறுநீரக ​வைத்தியசாலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். வைத்தியசாலையின் சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த சிறுநீரக வைத்தியசாலை ஊழியர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக வைத்தியசாலை கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Breaking News Sri Lanka

நாளை புரட்டாதி சனியன்று வெடுக்குநாறி மலையில் வழிபட அனுமதி!

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்வைத்த வாதங்களைத் தொடர்ந்து நாளை புரட்டாதி சனியன்று வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் இந்துக்கள் தங்குதடையின்றி வழிபட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என பொலிஸாருக்கு அறிவுறுத்திய நீதிபதி, இவ்வாறான வழக்குகளைத் தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். இதன்போது, வழிபாட்டு உரிமை மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை சுமந்திரன் நீதிமன்றத்தின் […]

Breaking News Sri Lanka World

உலகை அச்சுறுத்தி வரும் எல் நினோவால் 4.5 இலட்சம் பேர் வரை உயிரிழக்கக்கூடும்?

உலகையே அச்சுறுத்தி வரும் எல் நினோ காலநிலை மாற்றத்தினால் இம்மாதம் செப்டம்பர் முதல் அடுத்த ஆண்டு பெப்ரவரி வரையிலான இடைப்பட்ட 6 மாத காலத்தில் உலகளவில் 4,50,000க்கும் அதிகமானோர் வெப்பத்தின் தாக்கம் தாங்காமல் உயிரிழக்கக்கூடும் என நடத்திய புதிய ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் இந்த தீவிர வெப்ப மாறுபாடு, புவி வெப்பமயமாதலுடன் இணைந்து ‘சூப்பர் எல் நினோவாக’ உருவெடுத்துள்ளதே இந்த பெரும் அசாதாரண சூழ்நிலைக்கு முதன்மை காரணம் என தெரியவந்துள்ளது. எல் நினோ […]

Sri Lanka

இதுவரையில் 107,093 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் இலங்கைக்கு 107,093 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள அண்மைய தரவுகளின்படி, குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 32,536 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமையுடன், இது மொத்த வருகையில் 30 சதவீதமாகும். மேலும், பிரித்தானியாவில் இருந்து 7,906 பேரும் அவுஸ்திரேலியாவிலிருந்து 7,393 பேரும் இக்காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அத்துடன், 2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் செப்டம்பர் 20 ஆம் […]

Sri Lanka

அதிக விலைக்கு போத்தல் குடிநீர் விற்பனை?

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதலான விலைக்குப் குடிநீர் போத்தலை விற்பனை செய்தமை தொடர்பில், எல்ல பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த மோசடி கண்டறியப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இலக்கம் 18, புகையிரத நிலைய வீதி, எல்ல எனும் முகவரியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அக்காலத்தில் […]

Sri Lanka

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

தொடர்ந்தும் பெய்து வரும் கனமழை காரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்தை பகுதியில், நேற்று மாலை மண்மேடொன்று சரிந்து விழுந்துள்ளது. இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகளுக்குத் தடை ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். வீதியில் சரிந்து விழுந்துள்ள மண்மேட்டை விரைவாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tami Global News @2026. All Rights Reserved.