வனிதா சேனாதிராஜா மரணத்தில் தொடரும் சந்தேகங்கள்: காவல்துறை விசாரணை தீவிரம்
வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியையும், சமூக, கலாசார மற்றும் அரசியல் செயல்பாட்டாளருமான வனிதா சேனாதிராஜாவின் மரணம் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளதுடன், இது குறித்து முறையான சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா கோவில் குளம் இந்துக்கல்லூரியின் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றியவரும், வவுனியா விசேட காணி மத்தியஸ்த சபையுடன் இணைந்து செயல்பட்டவருமான வனிதா, பொலன்னறுவை மாவட்டத்தின் மின்னேரியா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் செப்டம்பர் 23 […]











