வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்தோற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது
வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான சமுத்திர தீர்த்தோற்சவம் நேற்று (26) கற்கோவளம் வங்கக்கடலில் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
வல்லிபுர ஆழ்வார், லட்சுமி அம்மன், பிள்ளையார் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களின் உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கற்கோவளம் கடற்கரைக்கு எழுந்தருளியதைத் தொடர்ந்து, பிற்பகல் சமுத்திர தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
வடமராட்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆலய மகோற்சவம் கடந்த 11ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது இன்று ஆலய வளாகத்தில் உள்ள தீர்த்தக் கேணியில் பட்டுத் தீர்த்தம் நடைபெறவுள்ளது.


