Some Populer Post

  • Home  
  • அரச காணிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள தனியாரின் காணிகள் விடுவிக்கப்படும்!
- Sri Lanka

அரச காணிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள தனியாரின் காணிகள் விடுவிக்கப்படும்!

யுத்தத்துக்கு பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஜி.பி.எஸ் முறைமையிலான அளவீட்டுப்படங்கள் ஊடாகவே காணிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது பொதுமக்களின் காணிகளும் அரச காணிகள் என்ற கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டிருக்கலாம். அரச காணிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள தனியாரின் காணிகள் விடுவிக்கப்படும் என சுற்றாடல் துறை அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனியார் காணிகளை வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனவளத்துறை திணைக்களம் ஆக்கிரமித்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, […]

யுத்தத்துக்கு பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஜி.பி.எஸ் முறைமையிலான அளவீட்டுப்படங்கள் ஊடாகவே காணிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது பொதுமக்களின் காணிகளும் அரச காணிகள் என்ற கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டிருக்கலாம். அரச காணிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள தனியாரின் காணிகள் விடுவிக்கப்படும் என சுற்றாடல் துறை அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனியார் காணிகளை வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனவளத்துறை திணைக்களம் ஆக்கிரமித்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனியார் காணிகளை வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனவளத்துறை திணைக்களம் ஆக்கிரமித்துள்ளதாக அந்த மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்க முடியாது.

யுத்தத்தின்போதும், அதற்கு பின்னரான காலப்பகுதிகளிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பல்வேறு காரணிகளால் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்துச் சென்றனர்கள். அவர்கள் வாழ்ந்த வீடு மற்றும் விவசாய நிலங்கள் பிற்பட்ட காலப்பகுதிகள் காடாகியிருக்கலாம்.

யுத்தத்துக்கு பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஜி.பி.எஸ் முறைமையிலான அளவீட்டுப்படங்கள் ஊடாகவே காணிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது பொதுமக்களின் காணிகளும் அரச காணிகள் என்ற கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டிருக்கலாம்.அரச வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளுக்குரிய காணிகள் கூட வனவளத்துறை திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைச்சரவை அங்கீகாரத்துடன் உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டது. இந்த குழு 06 மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலும் பல்வேறு காரணிகளால் அறிக்கையை சமர்ப்பிப்பது தாமதமானது. இந்த குழுவின் அறிக்கை எதிர்வரும் மாதமளவில் சமர்ப்பிக்கப்படும்.

தனியாரின் காணிகள் தவறான அளவீட்டுடன் வனவளத்துறை திணைக்களம்,வனஜீவராசிகள் திணைக்களத்துக்குள் உள்வாங்கப்பட்டிருந்தால் அவற்றை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.அவ்வாறு விடுவிக்க முடியாது நிலையில் அந்த காணிகளுக்கு பதிலாக மாற்றுக்காணிகளோ அல்லது நிவாரணமோ வழங்கப்படும்.இந்த பணியை இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்யவே எதிர்பார்த்துள்ளோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதும் இதனை அறிவுறுத்தியுள்ளோம். இயற்கை வாழிடங்களை பாதுகாத்துக் கொண்டே காணி சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலையும் காணப்படுகிறது என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.