காய்ச்சலால் அவதிப்படும்போது குளிக்கலாமா?
பருவநிலை மாற்றம், வைரஸ் தொற்று போன்ற காரணங்களால் காய்ச்சல் ஏற்படுவது பொதுவானது. காய்ச்சலால் அவதிப்படும்போது குளிக்கலாமா? தண்ணீர் குடிக்கலாமா? என்ற குழப்பம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. காய்ச்சலின் போது இயல்பாகவே உடல் வெப்பநிலை அதிகரிக்கும். சிலருக்கு வியர்வையும் அதிகரிக்கக்கூடும். இதனால் உடலில் திரவ இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனை ஈடு செய்வதற்கு வைத்தியரின் பரிந்துரையின்பேரில் போதுமான அளவு தண்ணீரோ அல்லது ஓ.ஆர்.எஸ். கரைசல், இளநீர், சூப் போன்ற திரவ பானங்களையோ உட்கொள்ளலாம். இத்தகைய திரவங்களை தவிர்த்தால் உடலில் […]











