Some Populer Post

Month: September 2026

Breaking News Sri Lanka

அனோஜனின் விடுதலைக்காக கொட்டும் மழையிலும் போராட்டம்!

சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், மரண தண்டனையை குறைத்து கருணை வழங்குமாறு வலியுறுத்தியும் ஹட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. “மனிதாபிமான வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இந்து அமைப்புகளின் ஒன்றியத்தினால் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மறுபரிசீலனை செய்து, அவருக்கு கருணை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை […]

Sri Lanka

கடும் மழை… மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் (19),நேற்று நள்ளிரவு முதல் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக இன்று (20) காலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதுடன், பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மழையுடன் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்தும் சிரமமான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கலகல, […]

Sri Lanka

முல்லைத்தீவு, வவுனியா உட்பட பல பகுதிகளுக்கு எச்சரிக்கை!

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கும் பலத்த இடி மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (20) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த இடி மின்னல் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், […]

India

ஏற்றுமதி 21.03 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது- ரிசர்வ் வங்கி

கடந்த 2025–26 நிதியாண்டில் நம்நாட்டின் மென்பொருள் சேவைகள் ஏற்றுமதி 8.2 சதவீதம் உயர்ந்து 21.03 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சாப்ட்வேர் ஏற்றுமதியில், முக்கிய வாடிக்கையாளராக அமெரிக்கா தொடர்ந்து முதன்மை சந்தையாக திகழ்கிறது. ஒட்டுமொத்த ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்களிப்பு 54.1 சதவீதமாக, அதாவது 11.37 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. ஐரோப்பிய நாடுகள் 31.8 சதவீத பங்களிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளன. பிரிட்டன் மட்டும் 15.4 சதவீத பங்கை பெற்றுள்ளது. […]

Sri Lanka

த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையே தான் போட்டி – மு.க.ஸ்டாலின் பேச்சு…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது. 75 ஆண்டுகள் ஒரு கட்சி நிலைத்திருப்பது சாதாரணம் அல்ல. 75 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே கம்பீரத்துடன் திமுக உள்ளது. தி.மு.க பார்க்காத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை.எதிரி யார் என கணித்து பணியாற்றி இருந்தால் சட்டமன்ற தேர்தலில் தோல்வியே ஏற்பட்டு இருக்காது.நமக்கும் அவர்களுக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் 17 லட்சம் தான்.நமது கூட்டணி கட்சிகளின் […]

Sri Lanka

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு உருவச்சிலை அமைக்க அனுமதிப்பீர்களா..

வடக்கில் தற்போது திலீபனுக்கு உருவச்சிலை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் எதிர்காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் உருவச்சிலை அமைக்க இந்த அரசாங்கம் அனுமதியளிக்குமா என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி தொடுத்திருந்தார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், வடக்கில் திலீபனுக்கு உருவச்சிலை அமைக்கப்பட்டு, நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளமை இலங்கை இராணுவத்தை அவமதிக்கும் ஒரு செயற்பாடாகும். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் […]

Sri Lanka

வவுனியாவில் தாயும் மகனும் சடலமாக மீட்பு!

வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், தூக்கில் தொங்கிய நிலையில் மகனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். குறித்த சடலங்கள் இன்று (19.09) மாலை மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாயும் அவரது மகனும் இருந்துள்ளனர். இந்த நிலையில் உறவினர் இருவர் மாலை குறித்த வீட்டிற்கு சென்ற போது தாய் இரத்த காயங்களுடன் வீட்டின் பிரதான அறையில் வீழ்ந்து […]

Sri Lanka

இலங்கைக்கு விடுத்துள்ள அபாய எச்சரிக்கை!

இலங்கையின் கடன் மீளச் செலுத்தும் திறன் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கையின் கடன் நிலைபேறுதன்மை நிலவினாலும், அது தொடர்பான ஆபத்துக்கள் இன்னும் அதிக மட்டத்திலேயே காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் மதிப்பீடு செய்துள்ளது. அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதத்துடன் தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் நிறைவடையும் போதும் இந்த அதிக ஆபத்துள்ள நிலைமை நீடிக்கும் என நாணய நிதியத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2026 மே 28 அன்று இலங்கை […]

Sri Lanka

போராட்டத்தில் குதித்த வடமாகாண கால்நடை வைத்தியர்கள்

வடமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டமானது நேற்றையதினம்(18.9.2026) ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் இடம்பெற்றது. இதன்போது, பெண் வைத்தியரகள் தமக்கு வாகன வசதிகள் வழங்கப்படாமையால் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டினர். மருந்து பற்றாக்குறை அத்தோடு, இந்த விடயம் தொடர்பில் மாகாண பணிப்பாளருக்கு அறிவித்தும் எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டினார். மேலும், மருந்து பற்றாக்குறை காணப்படுவதால் பணியாளர்களுடன் முரண்படவேண்டிய நிலை ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தமக்கு சிறந்த […]

Sri Lanka

தேசிய கொள்கைக் கட்டமைப்பு UNP கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – ரணில்

இலங்கையின் நீண்டகால சவால்களுக்குத் தீர்வு காணும் நோக்கில் முன்மொழியப்பட்ட தேசிய கொள்கைக் கட்டமைப்பு தொடர்பாக, பெலவத்தையைத் தளமாகக் கொண்ட அரசியல் குழுவைத் தவிர்த்து, மற்ற அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்த ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கிறார். பிட்டகோட்டேயில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய விக்கிரமசிங்க, நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலம் குறித்த பேச்சுவார்த்தைகளை எளிதாக்கும் வகையில் ஒரு […]

Tami Global News @2026. All Rights Reserved.