Some Populer Post

  • Home  
  • த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையே தான் போட்டி – மு.க.ஸ்டாலின் பேச்சு…
- Sri Lanka

த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையே தான் போட்டி – மு.க.ஸ்டாலின் பேச்சு…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது. 75 ஆண்டுகள் ஒரு கட்சி நிலைத்திருப்பது சாதாரணம் அல்ல. 75 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே கம்பீரத்துடன் திமுக உள்ளது. தி.மு.க பார்க்காத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை.எதிரி யார் என கணித்து பணியாற்றி இருந்தால் சட்டமன்ற தேர்தலில் தோல்வியே ஏற்பட்டு இருக்காது.நமக்கும் அவர்களுக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் 17 லட்சம் தான்.நமது கூட்டணி கட்சிகளின் […]

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

75 ஆண்டுகள் ஒரு கட்சி நிலைத்திருப்பது சாதாரணம் அல்ல. 75 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே கம்பீரத்துடன் திமுக உள்ளது.

தி.மு.க பார்க்காத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை.எதிரி யார் என கணித்து பணியாற்றி இருந்தால் சட்டமன்ற தேர்தலில் தோல்வியே ஏற்பட்டு இருக்காது.நமக்கும் அவர்களுக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் 17 லட்சம் தான்.நமது கூட்டணி கட்சிகளின் ஆதரவால் தான் த.வெ.க. ஆட்சி நடந்து வருகிறது.

த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாடு 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது.தமிழ்நாட்டில் த.வெ.க.வால் எந்த ஒரு அலையும் அடிக்கவில்லை.

சட்டம்-ஒழுங்கு பற்றி முதலமைச்சர் விஜய்க்கு சிறிதளவும் கவலையில்லை.ஜோசியர் செய்வதை செய்தாலே போதும் என்ற எண்ணத்தில் உள்ளார் முதலமைச்சர் விஜய்.

சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று சொல்லிவிட்டு மக்கள் முன் நடித்து வருகிறார்.

தவெகவிற்கு முறையாக தமிழக ரீல்ஸ் கழகம் என பெயர் வைத்திருக்க வேண்டும்.அவங்க பாஷையில் சொல்லணும்னா, த.வெ.க. ஆட்சியில் இரண்டுக்கு நடுவில் தான் போட்டியே.ஒன்று மின்வெட்டு, மற்றொன்று அரிவாள் வெட்டு என தெரிவித்தார்.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.