Some Populer Post

  • Home  
  • இலங்கையில் நடந்த சோகம்.. மின்னல் தாக்கி பாடசாலை மாணவன் உயிரிழப்பு.!
- Sri Lanka

இலங்கையில் நடந்த சோகம்.. மின்னல் தாக்கி பாடசாலை மாணவன் உயிரிழப்பு.!

அகலவத்தை, தெல்பே, ஹல்ஓவிட்ட பிரதேசத்தில் வீடொன்றின் அறையில் தரையில் தூங்கிக்கொண்டிருந்த 15 வயது பாடசாலை மாணவன் மீது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர், அகலவத்தை, தெல்பே, ஹல்ஓவிட்ட முகவரியில் வசிக்கும் அகலவத்தை மிஹிந்து மகா வித்யாலயாவில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் ஹசித பிரதீப் குமார (வயது-15) என பொலிஸார் தெரிவித்தனர். வீட்டு அறையில் தரையில் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்புப் படுகையில் (Plug Point) பாய்ந்த மின்னல் தாக்குதல் […]

அகலவத்தை, தெல்பே, ஹல்ஓவிட்ட பிரதேசத்தில் வீடொன்றின் அறையில் தரையில் தூங்கிக்கொண்டிருந்த 15 வயது பாடசாலை மாணவன் மீது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர், அகலவத்தை, தெல்பே, ஹல்ஓவிட்ட முகவரியில் வசிக்கும் அகலவத்தை மிஹிந்து மகா வித்யாலயாவில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் ஹசித பிரதீப் குமார (வயது-15) என பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டு அறையில் தரையில் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்புப் படுகையில் (Plug Point) பாய்ந்த மின்னல் தாக்குதல் அந்த மாணவனையும் தாக்கியுள்ளது.
இதில் படுகாயமடைந்த மாணவன் அகலவத்தை பிம்புர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.