Some Populer Post

  • Home  
  • போரை நிறுத்த அமெரிக்காவுக்கு 7 நிபந்தனைகளை விதித்த ஈரான்
- World

போரை நிறுத்த அமெரிக்காவுக்கு 7 நிபந்தனைகளை விதித்த ஈரான்

மேற்​காசிய போரை நிறுத்த அமெரிக்கா​வுக்கு 7 நிபந்தனை​களை ஈரான் விதித்​துள்​ளது. இந்த நிபந்​தனை​களை நிராகரித்​தால் போருக்கு தயா​ராக உள்​ளோம் என்​றும் ஈரான் எச்சரிக்கை விடுத்​திருக்​கிறது. கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதலை தொடங்​கியது. சுமார் 7 மாதங்​களாக இருதரப்பு இடையே போர் நீடித்து வரு​கிறது. ஈரானின் ராணுவ தளங்​கள், ஆயுதக் கிடங்​கு​களை குறி​வைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வரு​கிறது. இதற்கு பதிலடி​யாக சவுதி அரேபி​யா, ஐக்​கிய அரபு அமீரகம் உள்​ளிட்ட […]

மேற்​காசிய போரை நிறுத்த அமெரிக்கா​வுக்கு 7 நிபந்தனை​களை ஈரான் விதித்​துள்​ளது. இந்த நிபந்​தனை​களை நிராகரித்​தால் போருக்கு தயா​ராக உள்​ளோம் என்​றும் ஈரான் எச்சரிக்கை விடுத்​திருக்​கிறது.

கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதலை தொடங்​கியது. சுமார் 7 மாதங்​களாக இருதரப்பு இடையே போர் நீடித்து வரு​கிறது. ஈரானின் ராணுவ தளங்​கள், ஆயுதக் கிடங்​கு​களை குறி​வைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வரு​கிறது. இதற்கு பதிலடி​யாக சவுதி அரேபி​யா, ஐக்​கிய அரபு அமீரகம் உள்​ளிட்ட நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​கள் மீது ஈரான் ராணுவம் தாக்​குதல் நடத்தி வருகிறது.

போரை நிறுத்த அமெரிக்​கா, ஈரான் இடையே கத்​தார் அரசு சமரச முயற்​சிகளில் ஈடு​பட்டு வரு​கிறது. இதுகுறித்து ஈரானின் தேசிய பாது​காப்பு கவுன்​சில் செய​லா​ளர் மொஹ்சென் ரெஸாயீ நேற்று கூறிய​தாவது: போரை நிறுத்த அமெரிக்கா​வுக்கு 7 நிபந்தனைகளை விதித்​துள்​ளோம். கத்​தார் வாயி​லாக இந்த நிபந்தனை​களை அமெரிக்​கா​விடம் அளித்​திருக்​கிறோம். ஈரானுக்கு எதி​ரான தாக்​குதல்​களை நிறுத்த வேண்​டும்.

முடக்​கப்​பட்ட ஈரானின் நிதி ஆதா​ரங்​களை விடுவிக்க வேண்​டும். ஈரான் துறை​முகங்​களை குறி​வைத்து கப்​பல் போக்​கு​வரத்து முடக்​கப்​பட்டு இருக்​கிறது. எங்​களது கப்​பல்​களின் சுதந்​திர​மான கடல்​வழி போக்​கு​வரத்தை உறுதிசெய்ய வேண்​டும். இவை உள்ளிட்ட 7 நிபந்​தனை​களை விதித்​திருக்​கிறோம். அமெரிக்காவின் பதி​லுக்​காக காத்​திருக்​கிறோம். எங்​களது நிபந்தனை​களை நிராகரித்​தால் போருக்கு தயார் நிலை​யில் உள்ளோம். இவ்​வாறு மொஹ்சென் ரெஸாயீ தெரி​வித்​துள்​ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.