Some Populer Post

  • Home  
  • உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு: 15 பிரதிவாதிகள் குற்றவாளிகள்
- Breaking News - Sri Lanka

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு: 15 பிரதிவாதிகள் குற்றவாளிகள்

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று (22) கொழும்பு மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, 9 பேர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேருக்குமான தண்டனை இன்று அறிவிக்கப்படவுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார். நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய மூவர் அடங்கிய […]

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று (22) கொழும்பு மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, 9 பேர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேருக்குமான தண்டனை இன்று அறிவிக்கப்படவுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

நௌஃபர் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உட்பட 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.