Some Populer Post

  • Home  
  • நச்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்!
- Sri Lanka

நச்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்!

நச்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் தொடர்பான சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அரசியலமைப்பின் 121(1) உறுப்புரையின் கீழ் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட குறித்த சட்டமூலம் தொடர்பான தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அந்த அறிவித்தல் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9, 2026) சபாநாயகரால் சபைக்கு அறிவிக்கப்பட்டது. இதன்போது சபாநாயகர் குறிப்பிடுகையில், “அரசியலமைப்பின் 121(1) உறுப்புரையின் கீழ் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட ‘நச்சுகள், அபின் மற்றும் அபாயகரமான […]

நச்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் தொடர்பான சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 121(1) உறுப்புரையின் கீழ் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட குறித்த சட்டமூலம் தொடர்பான தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அந்த அறிவித்தல் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9, 2026) சபாநாயகரால் சபைக்கு அறிவிக்கப்பட்டது.
இதன்போது சபாநாயகர் குறிப்பிடுகையில்,

“அரசியலமைப்பின் 121(1) உறுப்புரையின் கீழ் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட ‘நச்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் தொடர்பான சட்டமூலம்’ தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைத்துள்ளது.

இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பின் எந்தவொரு உறுப்புக்கும் முரணானது அல்ல என்றும், இது பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையினால் நிறைவேற்றப்படலாம் என்றும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதன்படி, குழு நிலையில் உரிய திருத்தங்களை மேற்கொண்ட பின்னர், இச்சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக்கொள்ளலாம் என உயர் நீதிமன்றம் தனது தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.