Some Populer Post

  • Home  
  • பசிலை கைதுசெய்யுங்கள் – சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுங்கள் -நீதவான் உத்தரவு
- Sri Lanka

பசிலை கைதுசெய்யுங்கள் – சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுங்கள் -நீதவான் உத்தரவு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைதுசெய்து தன்முன்னாள் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார். அரசநிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் பசில் ராஜபக்சவை கைதுசெய்யுமாறு உத்தரவிட்டுள்ள நீதவான்,சந்தேகநபர் தொடர்பில் சர்வதேச பொலிஸின் உதவிகளை பெறுவதற்காக தனது பிடியாணையை ஆங்கிலம் சிங்களம் இரண்டுமொழிகளிலும் வெளியிடுமாறு உத்தரவிட்டுள்ளார். இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதியை மோசடி செய்தமை தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 2014 […]

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைதுசெய்து தன்முன்னாள் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
அரசநிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் பசில் ராஜபக்சவை கைதுசெய்யுமாறு உத்தரவிட்டுள்ள நீதவான்,சந்தேகநபர் தொடர்பில் சர்வதேச பொலிஸின் உதவிகளை பெறுவதற்காக தனது பிடியாணையை ஆங்கிலம் சிங்களம் இரண்டுமொழிகளிலும் வெளியிடுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதியை மோசடி செய்தமை தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
2014 இ;ல் 7.8 மில்லியன் ரூபாய்; மோசடி இடம்பெற்றுள்ளதாக விசாரணையாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாத்துறை ஊக்குவிப்பிற்கு என ஒதுக்கப்பட்ட நிதியை அதற்காக பயன்படுத்தாமல் ஊவா தேர்தல் பிரச்சாரத்திற்காக ரீசேர்ட்களை கொள்வனவு செய்வதற்காக பயன்படுத்தினார்கள் இதனால் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டது என சிஐடியினர் தெரிவித்துள்ளனர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.