Some Populer Post

  • Home  
  • அனோஜனுக்கு ஜனாதிபதியின் மூலமாக தீர்வு !
- Sri Lanka

அனோஜனுக்கு ஜனாதிபதியின் மூலமாக தீர்வு !

ஜனாதிபதியின் மூலமாக தீர்வு காணப்படவேண்டும்.. ஜனாதிபதி தலையிடவேண்டும்.. ஜனாதிபதி அநுரவினால் மட்டுமே இதற்கான நல்ல முடிவைப் பெற்றுத்தர முடியும்… இப்படியான எதிர்பார்ப்புகள், கோரிக்கைக்கான ஒரு பிரகாசமான நம்பிக்கை அனோஜனின் குடும்பத்தவரை ஜனாதிபதி அநுர அவர்கள் இன்று சந்தித்தது. நாட்டின் உயர் தலைவரை சந்திக்கமுடியுமா, அதுவும் ஒரு தமிழ் இளைஞனின் உயிருக்கான பெறுமதியை இலங்கையின் அரச தலைவர் வழங்குவாரா? இப்படியான நம்பிக்கையீனங்களை உடைத்துப்போட்டதே இந்த அநுர அரசாங்கத்தின் வெற்றி என்பேன். சிவராசா அனோஜனுக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் இயன்றளவு […]

ஜனாதிபதியின் மூலமாக தீர்வு காணப்படவேண்டும்..
ஜனாதிபதி தலையிடவேண்டும்..

ஜனாதிபதி அநுரவினால் மட்டுமே இதற்கான நல்ல முடிவைப் பெற்றுத்தர முடியும்…
இப்படியான எதிர்பார்ப்புகள், கோரிக்கைக்கான ஒரு பிரகாசமான நம்பிக்கை அனோஜனின் குடும்பத்தவரை ஜனாதிபதி அநுர அவர்கள் இன்று சந்தித்தது.

நாட்டின் உயர் தலைவரை சந்திக்கமுடியுமா, அதுவும் ஒரு தமிழ் இளைஞனின் உயிருக்கான பெறுமதியை இலங்கையின் அரச தலைவர் வழங்குவாரா?
இப்படியான நம்பிக்கையீனங்களை உடைத்துப்போட்டதே இந்த அநுர அரசாங்கத்தின் வெற்றி என்பேன்.

சிவராசா அனோஜனுக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் இயன்றளவு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக சட்ட ரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் தலையீடு செய்யும் என்றும் சுட்டிக்காட்டினேன்.

குறிப்பாக, சவூதி அரசரிடம் இது தொடர்பில் பொதுமன்னிப்பு வழங்குமாறு இராஜதந்திர மட்டத்தில் எழுத்துமூல கோரிக்கையை விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இங்கு குறிப்பிட்டேன்.என்று தன் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ஜனாதிபதி.சொன்னதைப் போலவே அவரால் முடிந்த உச்சபட்ச முயற்சி அனோஜனின் குடும்பத்தார்க்கு நிம்மதியைத் தரட்டும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.