Some Populer Post

  • Home  
  • மாவீரர் தின நிகழ்வில் ஈடுபட்ட இளைஞர் கைது
- Sri Lanka

மாவீரர் தின நிகழ்வில் ஈடுபட்ட இளைஞர் கைது

மன்னாரில் மாவீரர் தின நிகழ்வில் ஈடுபட்ட 25 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மாவீரர் தின பதாகையொன்றை (பேனர்) எழுத்தூர் பகுதியில் வீதிக்கு அருகில் காட்சிப்படுத்திய நிலையில் வியாழக்கிழமை (26) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த போது பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞரின் உடமையில் இருந்து மாவீரர் தின பதாகை மற்றும் விடுதலைப்புலிகளின் கொடி ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து இளைஞர் […]

மன்னாரில் மாவீரர் தின நிகழ்வில் ஈடுபட்ட 25 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவீரர் தின பதாகையொன்றை (பேனர்) எழுத்தூர் பகுதியில் வீதிக்கு அருகில் காட்சிப்படுத்திய நிலையில் வியாழக்கிழமை (26) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த போது பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞரின் உடமையில் இருந்து மாவீரர் தின பதாகை மற்றும் விடுதலைப்புலிகளின் கொடி ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்து இளைஞர் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.