Some Populer Post

  • Home  
  • பொலிஸ் நிலையங்களுக்குள் கைபேசி கொண்டு செல்வதற்குத் தடை?
- Sri Lanka

பொலிஸ் நிலையங்களுக்குள் கைபேசி கொண்டு செல்வதற்குத் தடை?

பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளைத் தாராளமாகக் கொண்டு செல்லலாம் எனவும், அதனைத் தடுக்கும் வகையில் எவ்விதச் சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்க இது தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “பொலிஸ் […]

பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளைத் தாராளமாகக் கொண்டு செல்லலாம் எனவும், அதனைத் தடுக்கும் வகையில் எவ்விதச் சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்க இது தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“பொலிஸ் நிலையங்களுக்குள் பொதுமக்கள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்லக் கூடாது என்று வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில் எவ்விதச் சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை. பொதுமக்கள் தாராளமாகத் தொலைபேசிகளைக் கொண்டு செல்ல முடியும்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்காக 357 உத்தியோகபூர்வ இல்லங்கள் காணப்படுகின்றன. புதிதாக உத்தியோகபூர்வ இல்லங்களை நிர்மாணிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிர்மாணப் பணிகள் பொதுமக்களின் உழைப்பினைப் பெற்று முன்னெடுக்கப்படவில்லை” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.