Some Populer Post

  • Home  
  • கடன் மதிப்பீடு குறித்து நிதி அமைச்சு தகவல்
- Sri Lanka

கடன் மதிப்பீடு குறித்து நிதி அமைச்சு தகவல்

இலங்கையின் நீண்டகால இறையாண்மைக் கடன் மதிப்பீட்டை ‘CCC+’ இலிருந்து ‘B−’ ஆக உயர்த்தியுள்ள S&P Global Ratings நிறுவனத்தின் தீர்மானத்தை நிதி அமைச்சு வரவேற்றுள்ளது. இதுதொடர்பில் நிதி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை தனது கடன் பொறுப்புகளை நிறைவேற்றும் திறன் அதிகரித்துள்ளதை இந்தத் தரமுயர்வு பிரதிபலிக்கின்றது. வெளிநாட்டு நிதி வசதிகள் தொடர்பான பாதகமான சூழ்நிலைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்துள்ளன. அரசாங்கத்தின் வரி மற்றும் வருமானச் சேகரிப்பில் ஏற்பட்டுள்ள வலுவான வளர்ச்சி இந்தத் தரமுயர்வுக்கு முக்கிய காரணமாக […]

இலங்கையின் நீண்டகால இறையாண்மைக் கடன் மதிப்பீட்டை ‘CCC+’ இலிருந்து ‘B−’ ஆக உயர்த்தியுள்ள S&P Global Ratings நிறுவனத்தின் தீர்மானத்தை நிதி அமைச்சு வரவேற்றுள்ளது.

இதுதொடர்பில் நிதி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை தனது கடன் பொறுப்புகளை நிறைவேற்றும் திறன் அதிகரித்துள்ளதை இந்தத் தரமுயர்வு பிரதிபலிக்கின்றது.

வெளிநாட்டு நிதி வசதிகள் தொடர்பான பாதகமான சூழ்நிலைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்துள்ளன. அரசாங்கத்தின் வரி மற்றும் வருமானச் சேகரிப்பில் ஏற்பட்டுள்ள வலுவான வளர்ச்சி இந்தத் தரமுயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அத்துடன், நாட்டின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு தொடர்ச்சியாக அதிகரித்துள்ளமையும் பொருளாதார நடவடிக்கைகள் சீராக முன்னெடுக்கப்படுவதும் இதற்குப் பங்களித்துள்ளன.

இந்தத் தரமுயர்வு, கடந்த செப்டெம்பர் மாதம் Fitch Ratings நிறுவனம் இலங்கையின் கடன் மதிப்பீட்டை உயர்த்தியதைத் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், நாட்டின் பொருளாதார மீட்சியைத் தொடர்வதற்கும் கடன் நம்பகத்தன்மையை மேலும் மேம்படுத்துவதற்கும் நிதி ஒழுக்கத்தைப் பேணுதல், வெளிநாட்டு நாணயக் கையிருப்பை வலுப்படுத்துதல் மற்றும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை முன்னெடுத்தல் ஆகியவற்றில் அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.