Some Populer Post

  • Home  
  • மூன்றாவது தடவையாக இலங்கையில் இதய மாற்று சத்திரசிகிச்சை
- Sri Lanka

மூன்றாவது தடவையாக இலங்கையில் இதய மாற்று சத்திரசிகிச்சை

இலங்கையில் வைத்தியசாலையொன்றில் மூன்றாவது தடவையாக மேற்கொள்ளப்பட்ட இதய மாற்று சத்திரசிகிச்சை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று முன்தினம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் விசேட வைத்திய நிபுணர் அனில் அபேவிக்ரமவின் தலைமையிலான விசேட வைத்தியக் குழுவினரால் இந்த இதய மாற்றுச் சத்திரசிகிச்சை நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 14 வயதுடைய சிறுவன் ஒருவருக்கே இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரின் இதயம் மிகவும் […]

இலங்கையில் வைத்தியசாலையொன்றில் மூன்றாவது தடவையாக மேற்கொள்ளப்பட்ட இதய மாற்று சத்திரசிகிச்சை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று முன்தினம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் விசேட வைத்திய நிபுணர் அனில் அபேவிக்ரமவின் தலைமையிலான விசேட வைத்தியக் குழுவினரால் இந்த இதய மாற்றுச் சத்திரசிகிச்சை நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

14 வயதுடைய சிறுவன் ஒருவருக்கே இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரின் இதயம் மிகவும் பலவீனமான நிலையில் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விபத்தொன்றில் சிக்கி மூளைச் சாவு அடைந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவரின் இதயமே இச்சிறுவனுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

சுமார் 07 மணித்தியாலங்களுக்கும் மேலாக விசேட வைத்தியக் குழுவினரால் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் பிரிவில் இந்தச் சத்திரசிகிச்சை மிக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூளைச் சாவடைந்த இளைஞன் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இளைஞனின் உறவினர்கள் தமது மகனின் இதயத்தைத் தானம் செய்ய சம்மதம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய சத்திரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த சிறுவனுக்கு அதனைப் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சத்திரசிகிச்சைக்காக இதயத்தைப் பெற்று மிகக் குறுகிய நேரத்திற்குள் அதனை மற்றைய நோயாளிக்குப் பொருத்த வேண்டும்.

கம்பஹா வைத்தியசாலையிலிருந்து இந்த இதயத்தைக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மிகக் குறுகிய நேரத்தில் கொண்டு வர வேண்டிய தேவை ஏற்பட்டது.

இதற்காக விசேட உலங்கு வானூர்தி ஒன்று தயார் செய்யப்பட்டிருந்தது. எனினும், நேற்று முன்தினம் மாலை கம்பஹா பிரதேசத்தில் கடும் மழை பெய்தமையால் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக உலங்கு வானூர்தியை தரையிறக்கவோ பறக்கவிடவோ முடியாத நிலை ஏற்பட்டது.

அந்தச் சந்தர்ப்பத்தில் வைத்தியக் குழுவினர் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களை தொடர்பு கொண்டுள்ளனர்.

இந்த இதய மாற்று சத்திரசிகிச்சைக்குத் தேவையான இதயத்தை கம்பஹா வைத்தியசாலையிலிருந்து விரைவாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு வருவதற்கு உதவுமாறு கோரியுள்ளனர்.

அதற்கமைய உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் மா அதிபர் கம்பஹாவிலிருந்து கொழும்பு வரையான பிரதான வீதியைச் சிறிது நேரத்திற்கு மூடி, விசேட பொலிஸ் பாதுகாப்பையும் வழங்கி கம்பஹா வைத்தியசாலையிலிருந்து இதயத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விரைவாக கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.

அதற்கமைய குறித்த நேரத்திற்குள் இதயம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு 14 வயதுச் சிறுவனுக்கு பொருத்தப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.