Some Populer Post

  • Home  
  • நான் மீண்டும் சிறைக்குச் செல்ல நேரிடலாம்!
- Sri Lanka

நான் மீண்டும் சிறைக்குச் செல்ல நேரிடலாம்!

நான் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதாலேயே தனது 87 வயதான தாயாருடன் இணைந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள விரும்பியதாகவும், அதற்காக ஒரு நாயக்க தேரரிடம் தமக்கும் தமது தாயாருக்கும் ஒன்றாக ஆசீர்வாதம் வழங்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தனது புதிய ஆய்வு நூலான 9.05 – விக்ருதிய: இலங்கையை உலுக்கிய கருத்தியல் என்ற நூல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் வெளியிடப்பட்டது. இவ் விழாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு […]

நான் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதாலேயே தனது 87 வயதான தாயாருடன் இணைந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள விரும்பியதாகவும், அதற்காக ஒரு நாயக்க தேரரிடம் தமக்கும் தமது தாயாருக்கும் ஒன்றாக ஆசீர்வாதம் வழங்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தனது புதிய ஆய்வு நூலான 9.05 – விக்ருதிய: இலங்கையை உலுக்கிய கருத்தியல் என்ற நூல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் வெளியிடப்பட்டது. இவ் விழாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

எனக்கு இப்போது இருப்பது என் அம்மா மட்டும்தான். அவருக்கு 87 வயது. அம்மாவுக்கு இப்போது பழைய காலத்தைப் பற்றிய நினைவுகள் மாத்திரமே அதிகமாக இருக்கின்றன. சில வேளைகளில் நாம் மீண்டும் சந்திக்கக்கூடும். சந்திக்காமல் போகவும் கூடும். அது குறித்து எனக்கு எந்தவிதமான வேதனையும் இல்லை. ஆனால் எனது கடமையை நான் செய்துவிட்டேன்.

மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் என்று சில வேளைகளில் எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் எனது தாயாருடன் சேர்ந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக ஒரு நாயக்க தேரரிடம், எனக்கும் எனது தாயாருக்கும் ஒன்றாக ஆசீர்வாதம் வழங்குமாறு கேட்டுக்கொண்டேன்.

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நான் செயற்படவில்லை. இந்த நாட்டில் பௌத்தர்களுக்கும், பிக்குகளுக்கும், பிக்குணிகளுக்கும், ஏனைய இன மக்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய விடயங்கள் தொடர்பாகவே நான் குரல் கொடுத்தேன்.

மதத் தீவிரவாதக் குழுக்கள் தொடர்பில் ஆபத்து இருப்பதை கண்டபோது நான் அமைதியாக இருக்க முடியவில்லை. அந்தக் குழுக்கள் முகாம்களை அமைத்துக்கொண்டிருந்தபோது அது தொடர்பில் பேசினேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரும் இது குறித்து எச்சரித்தேன். பல்வேறு தரப்பினருக்கும் கடிதங்களை அனுப்பினேன். ஜனாதிபதிகள், பாதுகாப்புச் செயலாளர்கள், பொலிஸ் தலைவர்கள் உள்ளிட்ட பலரிடமும் இதனைத் தெரிவித்தேன்.

எனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பல விடயங்கள் நீண்ட உரைகளில் இருந்து தனித்தனி வார்த்தைகளைப் பிரித்தெடுத்து ஊடகங்களில் வெளியிடப்பட்டவையாகும். அதன் மூலம் நான் வேறு விதமாக சித்தரிக்கப்பட்டேன். எனது முழுமையான கருத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பு பல சந்தர்ப்பங்களில் எனக்கு கிடைக்கவில்லை.

எனக்கு எதிரான வழக்குகள் தற்போதைய அரசாங்கத்தினால் தொடரப்பட்டவை அல்ல. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே இந்த வழக்குகள் தொடரப்பட்டன. 2012, 2013ஆம் ஆண்டுகளில் இருந்தே இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் தொடர்பில் நான் வெளிப்படையாகப் பேசினேன். அதன் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. அதன் பின்னர் நான் சிறைக்குச் சென்றேன்.

ஆரம்பத்தில் நாங்கள் ஜனாதிபதி மன்னிப்பைக் கோரவில்லை. சட்டரீதியாக ஏதேனும் தவறு ஏற்பட்டிருந்தால் அதனைச் சரிசெய்ய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருந்தது. அதிகாரிகளின் செயற்பாடுகளில் ஏற்பட்ட தவறுகளுக்காக என்னை ஏன் தண்டிக்க வேண்டும் என்ற கேள்வியும் எனக்குள் இருந்தது.

நான் எந்தவொரு இனத்தவருக்கும் எதிரான வெறுப்புடன் செயற்படவில்லை. யாருடைய இரத்தத்தையும் நான் கேட்கவில்லை. இரத்தம் சிந்தப்படுவதற்கு எதிரானவன். இந்த நாட்டையும் புத்த சாசனத்தையும் பாதுகாப்பதற்காகவே நான் செயற்பட்டேன்.

எந்த அரசாங்கத்திடமிருந்தும் நான் தனிப்பட்ட சலுகைகளைப் பெற்றதில்லை. பணம், வாகன அனுமதிப்பத்திரம், வெளிநாட்டுப் பயணம் உள்ளிட்ட எந்தவொரு தனிப்பட்ட நன்மையையும் பெற்றுக்கொள்ளவில்லை. எனது கடமையை நான் செய்ததாகவே கருதுகிறேன்.

தற்போதைய அரசாங்கத்துடன் எனக்கு தனிப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை. முன்னர் ஏதேனும் தவறு இடம்பெற்றிருந்தால் அதனைத் திருத்துவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும். பௌத்த சாசனத்துக்காகவும் நாட்டுக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

இந்த நூலை மக்கள் வாசித்து விடயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். தனிப்பட்ட வெறுப்புடன் அணுகாமல், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்குடன் செயற்பட வேண்டும். எனது செயற்பாடுகளில் ஏதேனும் குறைபாடு இருந்திருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருகிறேன என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.