Some Populer Post

  • Home  
  • மோட்டார் சைக்கிள்களுக்கு தனியான போக்குவரத்து வழித்தடம்
- Sri Lanka

மோட்டார் சைக்கிள்களுக்கு தனியான போக்குவரத்து வழித்தடம்

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வீதி விபத்துக்களைக் குறைக்கும் முக்கிய நடவடிக்கையாக, மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்ட விசேட போக்குவரத்து வழித்தட முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்தப் புதிய திட்டத்தின் கீழ், பிரதான வீதிகளில் சுமார் இரண்டு மீற்றர் அகலமுடைய விசேட வழித்தடம் மோட்டார் சைக்கிள்களுக்காக மாத்திரம் ஒதுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழித்தடத்தில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்கள் […]

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வீதி விபத்துக்களைக் குறைக்கும் முக்கிய நடவடிக்கையாக, மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்ட விசேட போக்குவரத்து வழித்தட முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய திட்டத்தின் கீழ், பிரதான வீதிகளில் சுமார் இரண்டு மீற்றர் அகலமுடைய விசேட வழித்தடம் மோட்டார் சைக்கிள்களுக்காக மாத்திரம் ஒதுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழித்தடத்தில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்கள் அதனை விட்டு வெளியேறி ஏனைய வாகனங்களுடன் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டாது. அதேபோன்று, ஏனைய வாகனங்களும் மோட்டார் சைக்கிள்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த வழித்தடத்திற்குள் நுழைவது முற்றாகத் தடை செய்யப்படும் என அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துக்களில் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் சாரதிகளாக இருப்பதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்தப் புதிய நடவடிக்கையின் மூலம் அவர்களின் பாதுகாப்பை அதிகபட்சமாக உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, மலேசியாவில் இத்தகைய தனியான மோட்டார் சைக்கிள் வழித்தட முறை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம், அந்நாட்டில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வீதி விபத்துக்களை 74 சதவீதத்தினால் குறைக்க முடிந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கொழும்பு உள்ளிட்ட கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும் நகர்ப்புறப் பகுதிகளில் வீதிகளின் இடவசதி குறைவாக இருப்பதால், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சவால்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனைக் கருத்திற்கொண்டு, ஆரம்பக் கட்டமாக கொழும்புக்கு வெளியேயுள்ள கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற பிரதான வீதிகளை இலக்காகக் கொண்டு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.