Some Populer Post

  • Home  
  • மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வு
- Sri Lanka

மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வு

உள்ளூர் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் உயர்ந்துள்ளதால், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையால் காய்கறி பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், சந்தையின் தேவைக்கு ஏற்ப காய்கறிகளை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், விலைகளும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால், நுகர்வோர் கொள்வனவு செய்வதைக் குறைத்துள்ளனர். இதன் காரணமாக தமது வியாபார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பகுதி காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஹட்டன் சந்தையில்  […]

உள்ளூர் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் உயர்ந்துள்ளதால், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையால் காய்கறி பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், சந்தையின் தேவைக்கு ஏற்ப காய்கறிகளை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், விலைகளும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால், நுகர்வோர் கொள்வனவு செய்வதைக் குறைத்துள்ளனர்.

இதன் காரணமாக தமது வியாபார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பகுதி காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஹட்டன் சந்தையில்   சில்லறை விலைகள்,

கத்தரிக்காய் – ரூ.500 பச்சை மிளகாய் – ரூ.800 போஞ்சி – ரூ.450 கரட் ரூ.600 – 700 பூசணி – ரூ.400 வாழைக்காய் – ரூ.400 முட்டைக்கோஸ் – ரூ.600 – 650 வெள்ளரிக்காய் – ரூ.350 தக்காளி – ரூ.800 பாகற்காய் – ரூ.800 புடலங்காய் – ரூ.600 நுவரெலியா உருளைக்கிழங்கு – ரூ.450 எலுமிச்சை – ரூ.2,000 சிவப்பு வெங்காயம் – ரூ.800 காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அன்றாட உணவுத் தேவைகளுக்காக காய்கறிகளை கொள்வனவு செய்யும் பொதுமக்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.