நபரொருவர் குறித்த உணவகத்தை உடைத்து உட்சென்று, அங்கிருந்த குறிப்பிட்ட அளவிலான பொருட்களைத் திருடிக்கொண்டு அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாக விசாரணையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சந்தேகநபர் இறுதியாக மெயின் வீதியின் ஊடாக வடக்கு நோக்கி நடந்து சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
அவர் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளார்:
-
நடுத்தர உடலமைப்பு கொண்ட ஒரு ஆண்
-
கறுப்பு நிற ஜாக்கெட் அணிந்திருந்தார்
-
கறுப்பு நிற ஹூட் (Hooded) ரக சுவெட்டர் அணிந்திருந்தார்
-
கறுப்பு நிற நைக்கி (Nike) பேண்ட் அணிந்திருந்தார்
-
கறுப்பு நிற தொப்பியில் (Baseball hat) “MODE” என்ற வார்த்தை சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருந்தது
-
கறுப்பு நிற முதுகுப்பை (Backpack) ஒன்றை ஏந்தியிருந்தார்
இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாகத் தங்களைத் தொடர்புகொண்டு விசாரணையாளர்களுக்கு உதவுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
