Some Populer Post

  • Home  
  • டொரண்டோ உணவகத்தில் உடைத்து உட்சென்று திருடிய சந்தேகநபரைத் தேடும் பொலிஸார்
- Canada

டொரண்டோ உணவகத்தில் உடைத்து உட்சென்று திருடிய சந்தேகநபரைத் தேடும் பொலிஸார்

நபரொருவர் குறித்த உணவகத்தை உடைத்து உட்சென்று, அங்கிருந்த குறிப்பிட்ட அளவிலான பொருட்களைத் திருடிக்கொண்டு அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாக விசாரணையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சந்தேகநபர் இறுதியாக மெயின் வீதியின் ஊடாக வடக்கு நோக்கி நடந்து சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. அவர் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளார்: நடுத்தர உடலமைப்பு கொண்ட ஒரு ஆண் கறுப்பு நிற ஜாக்கெட் அணிந்திருந்தார் கறுப்பு நிற ஹூட் (Hooded) ரக சுவெட்டர் அணிந்திருந்தார் கறுப்பு நிற நைக்கி (Nike) பேண்ட் அணிந்திருந்தார் கறுப்பு நிற தொப்பியில் (Baseball hat) […]

நபரொருவர் குறித்த உணவகத்தை உடைத்து உட்சென்று, அங்கிருந்த குறிப்பிட்ட அளவிலான பொருட்களைத் திருடிக்கொண்டு அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாக விசாரணையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சந்தேகநபர் இறுதியாக மெயின் வீதியின் ஊடாக வடக்கு நோக்கி நடந்து சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அவர் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளார்:

  • நடுத்தர உடலமைப்பு கொண்ட ஒரு ஆண்

  • கறுப்பு நிற ஜாக்கெட் அணிந்திருந்தார்

  • கறுப்பு நிற ஹூட் (Hooded) ரக சுவெட்டர் அணிந்திருந்தார்

  • கறுப்பு நிற நைக்கி (Nike) பேண்ட் அணிந்திருந்தார்

  • கறுப்பு நிற தொப்பியில் (Baseball hat) “MODE” என்ற வார்த்தை சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருந்தது

  • கறுப்பு நிற முதுகுப்பை (Backpack) ஒன்றை ஏந்தியிருந்தார்

இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாகத் தங்களைத் தொடர்புகொண்டு விசாரணையாளர்களுக்கு உதவுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Empath  @2024. All Rights Reserved.