Some Populer Post

  • Home  
  • இலங்கையின் மீன்பிடித்துறை வீழ்ச்சி?
- Sri Lanka

இலங்கையின் மீன்பிடித்துறை வீழ்ச்சி?

கடல் வெப்பநிலை உயர்வு மற்றும் எரிபொருள் விலையேற்றத்தால் 2026ஆம் ஆண்டு முதல் அரையாண்டில் கடல் மீன் உற்பத்தி 19.0 சதவீதமும், ஒட்டுமொத்த மீன்பிடித்துறை 19.1 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் வைத்து நேற்றைய தினம் (27.11.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். உள்நாட்டு மொத்த உற்பத்தியில் கடற்தொழிலின் பங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையானது, நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு நாடாகும். […]

கடல் வெப்பநிலை உயர்வு மற்றும் எரிபொருள் விலையேற்றத்தால் 2026ஆம் ஆண்டு முதல் அரையாண்டில் கடல் மீன் உற்பத்தி 19.0 சதவீதமும், ஒட்டுமொத்த மீன்பிடித்துறை 19.1 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் வைத்து நேற்றைய தினம் (27.11.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

உள்நாட்டு மொத்த உற்பத்தியில் கடற்தொழிலின் பங்கு

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையானது, நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு நாடாகும். இது தரைப்பரப்பை விட எட்டு மடங்கு பெரிய கடற்பரப்பைக் கொண்டது. எனினும், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் கடற்தொழிலின் பங்கு மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.

எனவே, இத்துறையின் கட்டமைப்புச் சிக்கல்களையும் கள நிலமைகளையும் மேம்பாட்டுக்கான முன் மொழிவுகளையும் நடுநிலையோடு முன்வைக்கலாம் என எண்ணுகின்றேன் .

அரச புள்ளிவிவரத் துறையின் 2026ஆம் ஆண்டுக்கான கையேட்டின்படி, 2025ஆம் ஆண்டு இலங்கை முழுவதும் 3,33,318 செயற்படு கடற்தொழிலாளர் காணப்பட்டனர். இவர்களில் 2,41,619 பேர் கடல் மீன்பிடியிலும், 91,699 பேர் நன்னீர் மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிலும் ஈடுபடுகின்றனர்.

நாட்டில் இயங்கும் மீன்பிடிக்கலங்களின் எண்ணிக்கை 60,887 ஆகும் . கடற்றொழில் அமைச்சின் 2025 செயலாற்றுகை அறிக்கையின்படி, 2,73,240 மீனவ குடும்பங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 11,23,000 மக்கள் நேரடியாக மீன்பிடித்தொழிலில் ஈடுபடுகின்றனர்.

படகு கட்டுதல், வலை பின்னுதல், பனிக்கட்டி (ஐஸ்) உற்பத்தி, கருவாடு பதனிடல், சந்தைப்படுத்தல் ஆகிய துணைத் தொழில்களில் 1577000 மக்கள் மறை முகாமாகப் பங்கு கொள்கின்றனர். இவ்வாறு 27 இலட்சம் மக்கள் மீன் பிடித்துறையை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

இது நாட்டின் மொத்த குடித்தொகையில் ஏறத்தாழ 18 சதவீதம் ஆகும். இலங்கை மத்திய வங்கி மற்றும் புள்ளிவிவரத் துறையின் 2025ஆம் ஆண்டு அறிக்கைகளின்படி, மீன்பிடித்துறையின் பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2023 ஆம் ஆண்டில் 1.1 சத வீதமாகவும் 2024 ஆம் ஆண்டில் 1.0 சதவீதமாகவும் 2025ஆம் ஆண்டில் 0.9 சதவீதமாகவும் 2026ஆம் ஆண்டு முதல் அரை ஆண்டில் 0.9 சதவீதமாகவும் காணப்படுகின்றது.

இது மொத்த தேசிய உற்பத்தியில் கடற்றொழிலின் நேரடிப் பங்களிப்புத் தொடர்ந்து சரிவடைந்து வருவதைக் காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.