Some Populer Post

  • Home  
  • அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி மக்கள் தீபமேந்திப் பிரார்த்தனை!
- Sri Lanka

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி மக்கள் தீபமேந்திப் பிரார்த்தனை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை செய்யக் கோரி சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடித் தீபமேந்தி விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டனர். வளத்தாப்பிட்டி பகுதியில் நேற்று(19) இடம்பெற்ற இந்நிகழ்வில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கைகளில் தீபங்களை ஏந்தி அனோஜனின் உயிரைக் காப்பாற்றவும், சவூதி அரசு அவருக்கு மன்னிப்பு வழங்கவும் மனமுருகிப் பிரார்த்தனை செய்தனர். அத்துடன், அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி இலங்கை அரசாங்கத்திற்கும் சவூதி தூதரகத்திற்கும் […]

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை செய்யக் கோரி சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடித் தீபமேந்தி விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

வளத்தாப்பிட்டி பகுதியில் நேற்று(19) இடம்பெற்ற இந்நிகழ்வில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கைகளில் தீபங்களை ஏந்தி அனோஜனின் உயிரைக் காப்பாற்றவும், சவூதி அரசு அவருக்கு மன்னிப்பு வழங்கவும் மனமுருகிப் பிரார்த்தனை செய்தனர்.

அத்துடன், அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி இலங்கை அரசாங்கத்திற்கும் சவூதி தூதரகத்திற்கும் அனுப்பி வைப்பதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுள்ள அவசர மனுவிலும் மக்கள் திரளாகக் கையொப்பமிட்டு வருகின்றனர்.

இதேவேளை, அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை நாட்டிற்கு மீட்டு வர வேண்டும் என வலியுறுத்தி கல்முனை, நற்பிட்டிமுனை உட்பட நாட்டின் பல்வேறு பாகங்களிலும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.