Some Populer Post

Month: October 2026

Sri Lanka

பிரதமர் ஹரிணி முக்கிய அறிவிப்பு!

உயர்ந்த தகுதிகளும் திறமைகளும் கொண்ட மனிதவளத்தை கல்வி அமைப்பில் இணைத்துக்கொள்வதற்கான முறையான வேலைத்திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கடவலவெவ மகா வித்தியாலய மாணவர்களுக்காக புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு மாடி கட்டடத்தை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான எட்டு வகுப்பறைகளை உள்ளடக்கிய இந்த கட்டடத்தின் நிர்மாணப் பணிகளுக்காக அரசாங்கம் சுமார் 55 மில்லியன் ரூபாயை முதலீடு செய்துள்ளது. இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், […]

Canada

அமெரிக்கத் தேர்தலில் கனடா தலையிடுவதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம்?

எல்லை தாண்டிய வர்த்தகம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் புதன்கிழமை காலை தான் தொடர்பில் இருந்ததாகக் கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தேர்தலில் கனடா தலையிடுவதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், புதன்கிழமை காலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் உரையாடியதாகப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து விரிவாகக் கேட்கப்பட்டபோது, “வர்த்தகம் தொடர்பான விஷயங்கள்” குறித்து விவாதித்ததாகக் குறிப்பிட்டார். மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த […]

Sri Lanka

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தால் மனித உரிமைகளுக்கு கடும் பாதிப்பு

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ மூலமாக மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கும் உரிமைகள் சவாலுக்குள்ளாவதற்கும் கடுமையான அச்சுறுத்தல் காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டத்தின் மூலம் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் சமூகத்திற்குள் மீண்டும் உறுதிப்படுத்தப்படுவதற்கான பாரிய அபாயம் தோன்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட ஆரம்ப வடிவத்துடன் ஒப்பிடும்போது சில திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள […]

Breaking News Sri Lanka

ராஜ்சோமதேவ ஒரு சிங்கள பௌத்த தேசியவாதி

பேராசிரியர் ராஜ்சோமதேவ சுத்தமான சிங்கள பௌத்த தேசியவாதி அவர் ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படுகின்றார் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ராஜ்சோமதேவ ஒரு நிகழ்ச்சி நிரலுடன் செயற்படுகின்றார் என்பதே தமிழ்தேசிய பேரவையின் நிலைப்பாடு. அவருடைய கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கின்றோம். கோட்டாபய ராஜபக்ச கிழக்கு மாகாணத்திலே தொல்பொருள்களை பாதுகாப்பதற்கான ஒரு குழுவை அமைத்தபோது அந்த குழுவில் இடம்பெற்றவர் ராஜ்சோமதேவவை கோட்டாபய […]

Sri Lanka

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னரே சாராஜஸ்மினை கண்காணித்த இராணுவபுலனாய்வாளர்- நீதிமன்றில் தகவல்

இராணுவபுலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவர் உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னரே சாராஜஸ்மினை கண்காணித்தார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தீலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டவேளை நீதிமன்றத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இராணுவபுலனாய்வு பிரிவை சேர்ந்த ராஜன் என்பவர் இலங்கை இராணுவத்தை சேர்ந்த கோப்ரல் சுரங்க என்பவருக்கு தகவல் ஒன்றை வழங்கினார். அதன்பின்னர் உயிர்த்தஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட இன்சாவ் என்பவரின் உறவினரின் வீட்டை கண்காணிக்குமாறு சுரங்க ராஜனை கேட்டுக்கொண்டார். ராஜன் மிகவும் […]

Canada

Alberta சுதந்திரத்தை நிராகரிக்கவுள்ள நிலையில் கனடிய அதிகாரிகளின் எதிர்வினைகள்

தந்திர வாக்கெடுப்பை (binding independence referendum) நோக்கிச் செல்வதை நிராகரித்து ஆல்பர்ட்டா (Alberta) மக்கள் வாக்களித்துள்ளதைக் காட்டும் கணிப்புகளுக்குக் கனடா முழுவதிலும் உள்ள அரசியல் தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். ஒன்டாரியோவின் (Ontario) பிரதமர் டக் ஃபோர்ட் (Doug Ford) கூறுகையில், ஆல்பர்ட்டா “தனது மாகாணத்திற்காக ஒரு வலுவான, மிகவும் வளமான எதிர்காலத்தை அமோகமாகத் தேர்ந்தெடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆல்பர்ட்டாவிற்கு வழங்கிய வாக்குறுதிகளைக் கனடா நிறைவேற்ற வேண்டும் என்றும், “கரை […]

Sri Lanka

Scarborough North நகர சபை உறுப்பினருக்கு எதிராக முன்னாள் எம்.பி.க்கள் களத்தில்!

வரவிருக்கும் நகராட்சித் தேர்தலுக்காக, இந்தப் பகுதியில் கொண்டுவரப்படவுள்ள முக்கியப் போக்குவரத்து மாற்றங்கள் காரணமாகத் டொரண்டோவின் 23வது Ward 23 ஒரு கடுமையான போட்டி நிலவும் மையப்புள்ளியாக மாறியுள்ளது. இதனால் பல முக்கிய வேட்பாளர்கள் இந்தப் பகுதியில் போட்டியிடுகின்றனர். சுரங்கப்பாதை நிலையத்தின் கட்டுமானம் மற்றும் மேயர் பதவிக்கான முன்னணி வேட்பாளர்கள் இருவரும் அறிவித்துள்ள புதிய இலகுரயில் திட்ட வாக்குறுதிகள் ஆகியவை, Scarborough North பகுதிக்கு பிரம்மாண்டத் திட்டங்கள் வரவிருப்பதை உறுதிசெய்கின்றன. எனவே, உட்கட்டமைப்புகள் கட்டியெழுப்பப்படும் வேளையில் இந்த வார்டை […]

Sri Lanka

திருமலை இரகசிய அறைப் படுகொலை: ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவருக்கும் விளக்கமறியல்

திருகோணமலை, பாலையூற்றுப் பகுதியில் இரண்டு பெண்களை வெள்ளை வேனில் கடத்திச் சென்று, கடற்படை முகாமின் கன்சைட் என அழைக்கப்படும் நிலத்தடி இரகசிய அறையில் சிறைவைத்து சித்திரவதைக்கு உட்படுத்திப் படுகொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகளையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுடீன், செவ்வாய்க்கிழமை (2026.10.20) உத்தரவிட்டுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதத்தில், மேரி டெல்ஷியா மற்றும் சசிகுமார் […]

Breaking News Sri Lanka

இலங்கையில் இனப்பிரச்சினை ஊடகவியலாளர்களின் கண்களைக் கட்டித்தான் முடிவடைந்தது… – இன்று தமிழ் ஊடகவியலாளர் படுகொலை தினம்

ஒக்டோபர் 19 ஆம் நாள், சிரேஷ்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட தினமாகும். இது இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களையும் நினைவு கூரும் நாளாகவும், அவர்களது படுகொலைகளுக்கு நீதி கோரும் நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளரான ம. நிமலராஜன் அவர்களை நினைவு கூறும் விதமாக இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. ஊடகவியலாளர் நினைவுத் தூபிக உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ் ஊடகவியலாளர் அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்களால் நினைவேந்தல் சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தி […]

Canada

நீரைத் தனியாரியமாக்கும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் Brad Bradford!

Torontoவின் நீர் அமைப்பைக் மாகாணக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரக்கூடும் என Olivia Chow முன்வைத்த குற்றச்சாட்டுக்கு Brad Bradford பதிலளித்துள்ளார். தண்ணீர் கட்டணங்களைக் குறைப்பதாகவும், Toronto Water ஒரு பொதுப் பயன்பாட்டு நிறுவனமாக மாற்றுவதாகவும் Brad Bradford உறுதியளிக்கிறார். வியாழக்கிழமை நடைபெற்ற மலிவு விலை வட்டமேசை மாநாட்டைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிராட்ஃபோர்ட், இந்த நீர் நிறுவனம் முழுமையாகப் பொதுச் சொத்தாகவே இருக்கும் என்றும், மாநகரசபை உறுப்பினர்கள் அதன் வாரியத்தில் அங்கம் வகிப்பார்கள் என்றும் திட்டவட்டமாகக் […]

Tami Global News @2026. All Rights Reserved.