Some Populer Post

Month: October 2026

World

AI: சிறுவர் துஷ்பிரயோகத்தை அதிகரிக்கிறது! – Internet Watch Foundation

இணையத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்கள் பெருமளவு பரவி வருவதுடன், இவ்வருடம் இதுவரை விசாரிக்கப்பட்ட சட்டவிரோதப் பொருட்களின் அளவானது, 2025 ஆம் ஆண்டின் முழுமையான மொத்த எண்ணிக்கையையும் ஏற்கனவே தாண்டிச் சென்றுள்ளதாக துஷ்பிரயோகப் பொருள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இன்டர்நெட் வாட்ச் ஃபவுண்டேஷனின் (Internet Watch Foundation – IWF) ஆய்வாளர்கள், கடந்த ஆண்டின் முழுமையான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டுமே உண்மையான புகைப்படங்களைப் […]

Sri Lanka

விளக்கமறியலுக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஷிரந்தி ராஜபக்‌ஷ!

முன்னாள் ஜனாபதிதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் இன்று (07) பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவருக்கு இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவருமான பிரதீப் காரியவசம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தலா ரூ. 10 மில்லியன் […]

Sri Lanka

சிராந்தி கைது

முன்னாள் முதல் பெண்மணி சிராந்திராஜபக்ச இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அரசவங்கியொன்றிலிருந்து பத்துமில்லியனை பெற்று அதனை முறைகேடாக பயன்படுத்தியமை ஊழல் மற்றும் பொதுச்சொத்து சட்டத்தின் கீழ் குற்றங்களில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சிராந்தி ராஜபக்ச கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்வதற்கு முன்னர் முன்னாள் முதல்பெண்மணியிடமிருந்து அதிகாரிகள் வாக்குமூலமொன்றை பதிவு செய்துள்ளனர்.

Sri Lanka

சிறையில் கைதியுடன் மோதல் – அனோஜனிற்கு முகத்தில் காயங்கள் – விஜித ஹேரத்

சவுதி அரேபிய சிறையில் அனோஜனிற்கும் மற்றுமொருகைதிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக அனோஜனின் முகத்தில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது அனோஜன் தடுத்துவைக்கப்பட்டுள்ள தம்மாம் சிறைச்சாலைக்கு இலங்கை அதிகாரிகள் இரு முறை சென்று அவரை பார்வையிட்டனர். ஓக்டோபர் ஆறாம் திகதி இலங்கை அதிகாரிகள் சென்றவேளை மற்றொரு கைதியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அனோஜனிற்கு காயங்கள் ஏற்பட்டுள்ளமை தெரியவந்தது. இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளுடன் இலங்கை அதிகாரிகள் […]

Sri Lanka

சர்வதேச தரநிலைகள் 3 வாரங்களில் முழுமையான தயார்நிலை!

நிதித் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதைத் தடுக்கும் (AML/CFT) சர்வதேச தரநிலைகள் தொடர்பான இலங்கையின் மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்த விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது. எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டிற்காக, அமைச்சுக்கள் மற்றும் நிறுவன மட்டங்களில் பரிந்துரைகள் மற்றும் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இதன்போது விரிவாக […]

Sri Lanka

ஞானசார தேரர் தப்பிப்பதற்கு உதவிய வங்கி அதிகாரிக்கு விளக்கமறியல்

மூன்று நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனாவின் ஞானசார தேரர் தப்பிப்பதற்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட வங்கி அதிகாரியை ஒக்டோபர் 9 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. களனி பகுதியை சேர்ந்த வங்கி அதிகாரி குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஞானசார தேரரை கைதுசெய்வதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை தெரிந்தும்,சந்தேக நபர் தனது வாகனத்தில் இராஜகிரியவிலிருந்து ஞானசார தேரரை எல்பிட்டிய பகுதிக்கு அழைத்து சென்றார் என கொழும்பு […]

Sri Lanka

சிறைச்சாலை விதிமுறைகளின்படி சிறை ஆடை கட்டாயம்!

சிறைச்சாலை விதிமுறைகளின்படி, 3 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் சிறைச்சாலையினால் வழங்கப்படும் சிறை ஆடையை அணிந்தே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பள்ளேதன்ன தெரிவித்துள்ளார். சிறைச்சாலையில் அடைக்கப்படும் கைதிகளின் சீருடைகள் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் பரவிவரும் பல்வேறு கருத்துக்களுக்குத் தெளிவுபடுத்தல் வழங்கி அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலதிகமாக விளக்கமளித்த அவர், பௌத்த பிக்கு ஒருவருக்கு நீதிமன்றத்தினால் சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், […]

Canada

ஸ்கார்பரோவில் இரண்டு வருடங்களுக்குள் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி- ஒலிவியா சௌ

கனடாவின் ஸ்கார்பரோவில் இரண்டுவருடங்களுக்குள் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி நிறுவப்படும் என டொரண்டோ மேயர் ஒலிவியா சௌ வாக்குறுதியளித்துள்ளார் டொரண்டோ மேயர் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 26ம் திகதி இடம்பெறவுள்ள வேளையில் பேட்டியொன்றில் இதனை அவர் தெரிவித்துள்ளார் பேட்டியின் சில பகுதிகள் தமிழ் சமூகத்துடன் இணைந்து பணியாற்றும் மிக அற்புதமான வாய்ப்பாக இருக்கிறது. பல ஆண்டுகளாக நாங்கள் மிக நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். 2009-இல் நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, என் மறைந்த கணவர் ஜாக் லேட்டனுடன் சேர்ந்து […]

Sri Lanka

கச்சத்தீவு மற்றும் கடற்தொழில் உரிமைகள்; மீண்டும் பரிசீலிக்கும் எண்ணம் இல்லை!

கச்சத்தீவு மற்றும் கடற்தொழில் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்களை மீண்டும் பரிசீலிக்கும் அல்லது திறக்கும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என்றும், இலங்கையுடன் இந்தியா நல்ல இராஜதந்திர உறவுகளைப் பேணி வருவதாகவும் இந்திய மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தங்களை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையிலேயே மத்திய அரசு தனது நிலைப்பாட்டை இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளது. நீதியரசர்களான சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற […]

Sri Lanka

பாரிஸில் பாரிய தீ விபத்தில் நாவாந்துறையைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் La Courneuve பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், இலங்கைத் தமிழர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 38 வயதான ரெக்சன் செல்வராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தனது குடும்பத்தினரை சந்திப்பதற்காக வீட்டிற்கு வந்திருந்த அவர், எதிர்பாராத விதமாக வீட்டில் ஏற்பட்ட கடுமையான தீ விபத்தில் சிக்கியதாகவும், தீயிலிருந்து வெளியேற முடியாமல் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இடம்பெற்ற இந்த துயரச் சம்பவம் நாவாந்துறை மற்றும் மெலிஞ்சிமுனை பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை […]

Tami Global News @2026. All Rights Reserved.