Some Populer Post

Month: October 2026

Sri Lanka

இந்திய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு நன்றி – சந்திரசேகர்

கச்சத்தீவு மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் கச்சத்தீவு கடற் […]

Sri Lanka

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனாலேயே ராஜபக்‌ஷ அரசியலை நிறுத்த முடியவில்லை – பொதுஜன பெரமுன

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாலும் ராஜபக்‌ஷ அரசியலை நிறுத்த முடியவில்லை. அவ்வாறிருக்கையில், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக மாத்திரம் 2029ஆம் ஆண்டில் மீண்டும் ராஜபக்‌ஷ ஆட்சியை இந்த நாட்டுக்கு கொண்டுவருவதை எவராலும் தடுக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி சுட்டிக்காட்டினார். கொழும்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தற்போது ராஜபக்‌ஷ குடும்பத்தைச் சேர்ந்த பல […]

Sri Lanka

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும் தலைமுறை (Rata Rakina Parapura) அமைப்பு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் மூலம் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்குவது அரச கடமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒரு நாட்டில், இச்சம்பவம் பாரிய கேள்விகளை எழுப்பியுள்ளதாக அவ்வமைப்பின் செயலாளர் காஞ்சன டி சில்வா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். பௌத்த துறவிகளின் கருத்துக்கள் தமது தரப்பின் கருத்துக்களுடன் ஒத்துப்போகாத போது அவர்களைத் தூற்றுவதும், விமர்சிக்கும் […]

World

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கு வழங்கப்படுவதாக பரிசுக்கு அறிவித்துள்ளது. நவநீதம் பிள்ளை ஒரு தமிழ் வழிதோன்றல் என்பது குறிப்பிடத்தக்கது. நோபல் பரிசுகுழு இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது விதிவிலக்கான துணிச்சலுடனும் நேர்மையுடனும் , மிகவும் விரிவான உலகளாவிய சட்ட அமைப்பை ஏற்படுத்திக்கொடுத்தமைக்காகவும் , போர்க்குற்றங்கள்,மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்,மற்றும் இனப்படுகொலைகள் ஆகியவற்றுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் […]

Chemmani News

செம்மணி 582 மனித எச்சங்கள்; ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் என்ன சொல்லியுள்ளது?

யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து 582 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை மற்றும் சர்வதேச தடயவியல் உதவி ஆகியவை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் என்ன நிலைப்பாட்டை குறிப்பிட்டுள்ளது? உள்ளக பொறிமுறையை பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக புறக்கணித்து வரும் நிலையில் உள்ளக பொறிமுறை ஊடாகவே தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் சர்வதேச அரங்கில் குறிப்பிடுகிறது. இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு எவ்வாறு நீதி கிடைக்கும். பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அரசாங்கத்தின் நகர்வுகள் […]

Sri Lanka

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று வியாழக்கிழமை (08.10.2026) முன்னெடுக்கப்பட்டது. எதிர்காலத்தைச் சிதைக்கும் செயற்பாட்டுக்கு அனுமதி வழங்கிய பிரதேச செயலரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு வலுவான கோரிக்கை விடுக்கப்பட்டது. தெல்லிப்பழைச் சந்தியில் காலை 9 மணியளவில் ஆரம்பமான இந்தப் போராட்டப் பேரணி, தெல்லிப்பழை பிரதேச செயலகத்தைச் சென்றடைந்தது. மதுபானசாலை அனுமதியை மறுபரிசீலனை செய்யுமாறு கோரும் நியாயமான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் பிரதேச […]

Sri Lanka

தேசிய சாரணர் ஜம்போரி 2027 ஜனவரி 17 முதல் 23 வரை

இலங்கை சாரணர் இயக்கத்தின் 115 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 11 ஆவது தேசிய சாரணர் ஜம்போரி, 2027 ஆம் ஆண்டு ஜனவரி 17 முதல் 23 வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு வளாகத்தை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சாரணர்கள் 12,000 பேருக்கு மேல் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை தேசிய சாரணர் ஜம்போரிக்கு அனுசரணை வழங்கும் அரச […]

Sri Lanka

அனோஜனுக்கான மரண தண்டனையை இரத்து செய்ய வலியுறுத்தும் சர்வதேச மன்னிப்புச் சபை

சவுதி அரேபியாவினால் இலங்கையைச் சேர்ந்த இளைஞரான சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) அமைப்பு தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, குறித்த குற்றச்சாட்டானது முற்றாக கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது என்பதால், அவரை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது. முகமது நபியை இழிவுபடுத்தும் வகையில் அமைந்த கருத்து ஒன்றை தனது சமூக ஊடகக் கணக்கில் பதிவிட்டார் […]

Sri Lanka

குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பு: கோட்டை முன்னாள் நீதவான் மீண்டும் சேவையில்

கொழும்பு கோட்டை நீதவானாக கடமையாற்றிய போது இடைநீக்கம் செய்யப்பட்ட கோசல சேனாதீரவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் சேவையில் அமர்த்துவதற்கு நீதிச்சேவைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு சட்டவிரோதமாக மின்சாரம் மற்றும் நீர் இணைப்புகளைப் பெற்றுக் கொண்டதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் திகதி முதல் சேனாதீரவின் சேவை இடைநிறுத்தப்பட்டது. 27 மாதங்களாக 20 க்கும் மேற்பட்ட சாட்சியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீர்க்கமான விசாரணைகளின் பின்னர், பிரதம […]

Sri Lanka

NPP பாராளுமன்ற உறுப்பினர் கைது

தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tami Global News @2026. All Rights Reserved.