Some Populer Post

  • Home  
  • நீரைத் தனியாரியமாக்கும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் Brad Bradford!
- Canada

நீரைத் தனியாரியமாக்கும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் Brad Bradford!

Torontoவின் நீர் அமைப்பைக் மாகாணக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரக்கூடும் என Olivia Chow முன்வைத்த குற்றச்சாட்டுக்கு Brad Bradford பதிலளித்துள்ளார். தண்ணீர் கட்டணங்களைக் குறைப்பதாகவும், Toronto Water ஒரு பொதுப் பயன்பாட்டு நிறுவனமாக மாற்றுவதாகவும் Brad Bradford உறுதியளிக்கிறார். வியாழக்கிழமை நடைபெற்ற மலிவு விலை வட்டமேசை மாநாட்டைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிராட்ஃபோர்ட், இந்த நீர் நிறுவனம் முழுமையாகப் பொதுச் சொத்தாகவே இருக்கும் என்றும், மாநகரசபை உறுப்பினர்கள் அதன் வாரியத்தில் அங்கம் வகிப்பார்கள் என்றும் திட்டவட்டமாகக் […]

Torontoவின் நீர் அமைப்பைக் மாகாணக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரக்கூடும் என Olivia Chow முன்வைத்த குற்றச்சாட்டுக்கு Brad Bradford பதிலளித்துள்ளார்.

தண்ணீர் கட்டணங்களைக் குறைப்பதாகவும், Toronto Water ஒரு பொதுப் பயன்பாட்டு நிறுவனமாக மாற்றுவதாகவும் Brad Bradford உறுதியளிக்கிறார்.

வியாழக்கிழமை நடைபெற்ற மலிவு விலை வட்டமேசை மாநாட்டைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிராட்ஃபோர்ட், இந்த நீர் நிறுவனம் முழுமையாகப் பொதுச் சொத்தாகவே இருக்கும் என்றும், மாநகரசபை உறுப்பினர்கள் அதன் வாரியத்தில் அங்கம் வகிப்பார்கள் என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

தனியுரிமை மயமாக்கல் குறித்துப் பேசிய பிராட்ஃபோர்ட், “இது ஒருபோதும் நடக்காது. மேயர் Chowவிடம் என்னால் இதை விடத் தெளிவாகச் சொல்ல முடியாது, அது ஒருபோதும் நடக்காது” என்றார்.

கனடா முழுவதும் உள்ள Toronto Hydro மற்றும் பிற பொதுச் சொந்தமான நகராட்சிப் பயன்பாட்டு நிறுவனங்களுடன் அவர் தனது முன்மொழியப்பட்ட மாதிரியை ஒப்பிட்டார்.

டொரொண்டோவின் எதிர்காலம் குறித்து அர்த்தமுள்ள விவாதத்தில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, வாக்காளர்களை அச்சுறுத்த Chow இந்த விவகாரத்தைப் பயன்படுத்துவதாகவும் Brad Bradford குற்றம் சாட்டினார்.

“முழுவதும் பயம், துளியும் உண்மைகள் இல்லை” என்றும் அவர் கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.