கொழும்பு போர்ட் சிட்டியில் முதலீடு செய்ய வந்த சீன முதலீட்டாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து, அவர்களிடம் இருந்து பெருமளவு பணத்தை கறந்து வந்த சீன பாதாள உலகக் குழுவின் முக்கியத் தலைவர் ஒருவர், கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் வைத்து மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார் என சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு, அந்நாட்டு பொலிஸாருக்குப் பயந்து இரகசியமாக இலங்கைக்குத் தப்பியோடு வந்துள்ள குறித்த நபர், கொழும்பிலுள்ள பல முன்னணி ஹோட்டல்களில் தங்கியவாறு இந்த மிரட்டல் மற்றும் கறுப்புப் பண மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சந்தன கொடிதுவக்கு மற்றும் சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் கமல ஆரியவன்ச ஆகியோரின் நேரடிப் பார்வையின்கீழ் மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் (CCB) பல நாட்களாக தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இதன் பலனாகவே கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.


