Some Populer Post

  • Home  
  • உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் வைத்தியர்!
- Sri Lanka

உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் வைத்தியர்!

தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் (WHO) சர்வதேச மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வைத்தியர் மதுரகன் செல்வராசா பங்கேற்றுள்ளார். உலக சுகாதார அமைப்பின் 2026ஆம் ஆண்டுக்கான Palliative Care Global Action Forum பணிக்குழுவின் வருடாந்தக் கூட்டம், ஒக்டோபர் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் தென் கொரியாவின் சியோலில் உள்ள கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டுடன் இணைந்து நடைபெற்ற சர்வதேச மாநாடு, நிவாரணப் பராமரிப்பின் 30ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு […]

தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் (WHO) சர்வதேச மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வைத்தியர் மதுரகன் செல்வராசா பங்கேற்றுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் 2026ஆம் ஆண்டுக்கான Palliative Care Global Action Forum பணிக்குழுவின் வருடாந்தக் கூட்டம், ஒக்டோபர் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் தென் கொரியாவின் சியோலில் உள்ள கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இம்மாநாட்டுடன் இணைந்து நடைபெற்ற சர்வதேச மாநாடு, நிவாரணப் பராமரிப்பின் 30ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எதிர்காலத்திற்குத் தயாரான நிவாரணப் பராமரிப்பு, கொள்கை, தொழில்நுட்பம் மற்றும் சமத்துவத்தை ஒருங்கிணைத்தல் என்பன மாநாட்டின் முக்கிய கருப்பொருள்களாக அமைந்திருந்தன.

இக்கூட்டத்தில் 31 நாடுகளைச் சேர்ந்த 66 பேர் கலந்துகொண்டதாக வெளியிடப்பட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து ஒரே பிரதிநிதியாக மதுரகன் செல்வராசா பங்கேற்றதாகவும் அந்தப் பதிவு குறிப்பிடுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.