Some Populer Post

  • Home  
  • எட்டோபிகோ அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் பலி
- Canada

எட்டோபிகோ அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் பலி

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எட்டோபிகோ (Etobicoke) அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நள்ளிரவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து, 30 மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நள்ளிரவு 12:00 மணியளவில் கிப்ளிங் அவென்யூ (Kipling Avenue) மற்றும் ஆல்பியன் ரோடு (Albion Road) பகுதியில் நடந்துள்ளதாக டொராண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, கத்திக் குத்துக் காயங்களுடன் ஒரு நபர் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். பலியானவரின் பெயரை காவல்துறையினர் இன்னும் வெளியிடவில்லை, இருப்பினும் அவர் 30 வயதுகளில் […]

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எட்டோபிகோ (Etobicoke) அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நள்ளிரவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து, 30 மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நள்ளிரவு 12:00 மணியளவில் கிப்ளிங் அவென்யூ (Kipling Avenue) மற்றும் ஆல்பியன் ரோடு (Albion Road) பகுதியில் நடந்துள்ளதாக டொராண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, கத்திக் குத்துக் காயங்களுடன் ஒரு நபர் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். பலியானவரின் பெயரை காவல்துறையினர் இன்னும் வெளியிடவில்லை, இருப்பினும் அவர் 30 வயதுகளில் மதிக்கத்தக்கவர் என நம்பப்படுகிறது.

காயமடைந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாகக் காலை 6:00 மணிக்கு மேல் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட இடுகையில் காவல்துறையினர் புதுப்பித்துள்ளனர்.

CP24 ஊடகத்திற்கு புலனாய்வாளர்கள் அனுப்பிய மின்னஞ்சலில், இச்சம்பவம் நடந்த இடத்திலேயே சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரும் 30 வயதுகளில் மதிக்கத்தக்கவர் என நம்பப்படும் அதேவேளை, தற்போது வரை அவரது பெயரும் வெளியிடப்படவில்லை.

இக்கொலை வழக்கு தொடர்பான விசாரணையை homicide பிரிவு (கொலைப்புலனாய்வுப் பிரிவு) கையில் எடுத்துள்ளது.

இது குறித்து கூடுதல் தகவல் தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Empath  @2024. All Rights Reserved.