வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார்.
அன்னாரின் மறைவுச் செய்தி தமிழ் அரசியல் பரப்பிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ்த் தேசியத்திற்காகவும் இறுதிவரை உரத்துக் குரல் கொடுத்த அரசியல் ஆளுமைகளில் ஒருவராக அவர் திகழ்ந்தார்.
தனது அரசியல் பயணத்தில் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்ட அவர், தனது கொள்கைகளில் உறுதியாக இருந்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் அவர் அரசியல் பணியாற்றியுள்ளார். அவரது மறைவு தமிழ் அரசியல் பரப்பில் ஒரு முக்கியமான இழப்பாகக் கருதப்படுகிறது.


