Some Populer Post

  • Home  
  • வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் கனடாவிடம் உள்ள ‘பிடிமானம்’ என்ன என்பதை கார்னி தெளிவுபடுத்த வேண்டும்: பொய்லியேவ்
- Canada

வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் கனடாவிடம் உள்ள ‘பிடிமானம்’ என்ன என்பதை கார்னி தெளிவுபடுத்த வேண்டும்: பொய்லியேவ்

வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவிற்கு எதிராக கனடாவிடம் உள்ள ‘பிடிமானம்’ (leverage) அல்லது பலம் என்ன என்பதை பிரதமர் மார்க் கார்னி நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லியேவ் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை ‘தி கனடியன் பிரஸ்’ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், கனடா-அமெரிக்கா-மெக்சிகோ வர்த்தக உடன்படிக்கையை புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் எரிசக்தி மற்றும் முக்கிய தாதுக்களை (critical minerals) ஒரு ‘பிடிமானமாக’ பயன்படுத்துவதை மார்க் கார்னி நிராகரித்திருந்தார். ஆனால், வர்த்தக ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கும், […]

வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவிற்கு எதிராக கனடாவிடம் உள்ள ‘பிடிமானம்’ (leverage) அல்லது பலம் என்ன என்பதை பிரதமர் மார்க் கார்னி நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லியேவ் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை ‘தி கனடியன் பிரஸ்’ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், கனடா-அமெரிக்கா-மெக்சிகோ வர்த்தக உடன்படிக்கையை புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் எரிசக்தி மற்றும் முக்கிய தாதுக்களை (critical minerals) ஒரு ‘பிடிமானமாக’ பயன்படுத்துவதை மார்க் கார்னி நிராகரித்திருந்தார்.

ஆனால், வர்த்தக ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கும், வரி விதிப்புகளை (tariffs) முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் ஒட்டாவாவிடம் உள்ள பலம் என்ன மற்றும் பிரதமரின் கோரிக்கைகள் என்ன என்பதை அவர் துல்லியமாக விளக்க வேண்டும் என பொய்லியேவ் கூறியுள்ளார்.

இந்தத் துறைகளை அமெரிக்காவுடன் அல்லது பிற வர்த்தகக் கூட்டாளிகளுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வர்த்தக வாய்ப்புகளாகவே தான் கருதுவதாக கார்னி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் எரிசக்தியை ஒரு ஆயுதமாகவோ அல்லது பிடிமானமாகவோ பயன்படுத்த ஒட்டாவா முயற்சிக்கக் கூடாது என அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் இவ்வாரத் தொடக்கத்தில் கனடிய அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இருப்பினும், வர்த்தக ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதில் கனடாவின் எரிசக்தி மற்றும் இயற்கை வளங்களே “கனடாவின் வலுவான துருப்புச் சீட்டுகள்” என்று இயற்கை வள அமைச்சர் டிம் ஹோட்சன் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Empath  @2024. All Rights Reserved.