Some Populer Post

  • Home  
  • பாடசாலைகளில் மாணவர் சேர்க்கை 40,000ஆல் குறைவு
- Sri Lanka

பாடசாலைகளில் மாணவர் சேர்க்கை 40,000ஆல் குறைவு

ஆண்டுதோறும் முதலாம் தரத்திற்கு மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை சுமார் 40,000 பேரால் குறைந்து வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் குழந்தைகள் பிறக்கும் வீதம் குறைந்து வருவதே இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக, ஆண்டுதோறும் சுமார் 3 இலட்சம் குழந்தைகள் பாடசாலைகளில் சேர்க்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், புதிதாக 309 ஆரம்பப் பாடசாலைகள் அமைக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். […]

ஆண்டுதோறும் முதலாம் தரத்திற்கு மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை சுமார் 40,000 பேரால் குறைந்து வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் குழந்தைகள் பிறக்கும் வீதம் குறைந்து வருவதே இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக, ஆண்டுதோறும் சுமார் 3 இலட்சம் குழந்தைகள் பாடசாலைகளில் சேர்க்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், புதிதாக 309 ஆரம்பப் பாடசாலைகள் அமைக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் மட்டும் 31 ஆரம்பப் பாடசாலைகள் அமைக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்ட மதுர செனவிரத்ன, இந்தப் பாடசாலைகள் அனைத்தும் ஒரே மாதிரியான கட்டிட வடிவமைப்பில் நிர்மாணிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆரம்பப் பாடசாலைகளில் நவீன உலகிற்கு ஏற்ற வகையிலான கழிப்பறை வசதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையிலும் சில மாற்றங்களைச் செய்வதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.