Some Populer Post

  • Home  
  • யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து விபத்து – ஐவர் பலி
- Sri Lanka

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து விபத்து – ஐவர் பலி

அனுராதபுரம், ரம்பேவ பகுதியில் இன்று (10) காலை A9 வீதியில் மூன்று பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர். இன்று காலை 10.30 மணியளவில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் F.U. வூட்லர் நியூஸ்வயருக்குத் தெரிவித்துள்ளார். SLTB பேருந்துகளில் ஒன்றின் பின்னால் பயணித்த தனியார் பேருந்தொன்று, பின்னர் […]

அனுராதபுரம், ரம்பேவ பகுதியில் இன்று (10) காலை A9 வீதியில் மூன்று பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

இன்று காலை 10.30 மணியளவில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் F.U. வூட்லர் நியூஸ்வயருக்குத் தெரிவித்துள்ளார்.

SLTB பேருந்துகளில் ஒன்றின் பின்னால் பயணித்த தனியார் பேருந்தொன்று, பின்னர் அந்தப் பேருந்தின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மிஹிந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் (OIC) கூற்றுப்படி, ஐவர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், காயமடைந்த சுமார் 18 முதல் 20 பேர் வரை அனுராதபுரம், வவுனியா மற்றும் மதவாச்சி ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மோதலுக்கான சூழல் மற்றும் காரணத்தைக் கண்டறிவதற்காக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.